வீட்டைப் பாதுகாக்க பொதுவாக அனைவரும் நாய்களை வளர்ப்பது வாடிக்கை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக நாய்களுக்கு பதிலாக ஓநாய்களை வளர்க்கும் புதிய நடைமுறை கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி பகுதியிலன் கிராமங்களில் நிலவுகிறது.
வேட்டைக்கார்ர்களிடமிருந்து வாங்கப்படும் ஓநாய்க் குட்டியின் விலை 500 அமெரிக்க டாலாராம். அது, நாயையைப் போல நன்கு பழக்கப்படுத்தி விட்டால் போதுமாம். நம்முடன் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பாக வருகிறதாம்.
ஓநாய் குட்டியை 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வளர்த்தி வரும் நூர்சேட் கூறுகையில், ஓநாய் குட்டியை எப்போதாவதுதான் கட்டி வைப்பேன். அது என்னுடனே நடைப்பயிற்சிக்கு வரும். கிராமத்தைச் சுற்றி வந்தபோதும் அது களைப்படவதில்லை. எனது குடும்பத்தாரும், கிராமத்தாரும் ஓநாயைப் பார்த்து பயப்படுவதில்லை. ஒரே பிரச்னை என்னவென்றால் நாயைவிட ஓநாயுக்கு அதிக உணவு அளிக்க வேண்டும். 3 வேளையும் கட்டாயமாக ஓநாய்க்கு உணவு வைக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான் என்கிறார்.
அதேசமயம், ஓநாய் போன்ற விலங்குகளை மனிதர்களிடமிருந்து தூரத்தில் வைத்திருப்பதுதான் நலம் என்று தெரிவிக்கின்றனர் ஓநாய் நிபுணர் அல்மாஸ் ஸபரோவ்.