• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் உயர் வேக இருப்புப்பாதையின் வளர்ச்சி சாதனை
  2015-01-30 16:08:53  cri எழுத்தின் அளவு:  A A A   
2014ஆம் ஆண்டு சீனாவில் இருப்புப்பாதையின் கட்டுமானத்துக்கு 80 ஆயிரத்து 880 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு புதிதாக திறந்து வைக்கப்பட்ட இருப்புப்பாதையின் நீளம், 8427 கிலோமீட்டரை எட்டியுள்ளது. இது வரலாற்றில் மிக உயர்ந்த பதிவாகியுள்ளது. இது வரை, சீனாவில் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம், ஒரு லட்சத்து 12 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. இதில் அதிவிரைவு இருப்புப்பாதையின் நீள விகிதம், 10 விழுக்காட்டுக்கு மேலாகும். இத்தகவலை சீன இருப்புப்பாதை தலைமை கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் ச்செங் குவாங் ச்சூ தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு, குவெய் யாங்-குவாங் சோ உயர் வேக இருப்புப்பாதை, ஷாங்ஹாய்-குவென் மிங் உயர் வேக இருப்புப்பாதை உள்ளிட்ட அதிவிரைவு இருப்புப்பாதைகள் கட்டியமைக்கப்பட்டு, போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதிவிரைவு இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட மொத்த நீளம், 16 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் இத்தகைய இருப்புப்பாதை போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும் மொத்த நீளம், 18 ஆயிரம் கிலோமீட்டரை எட்டக்கூடும்.

பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப் பாதையின் ஆக்கப்பணி பற்றிய சீனாவின் நெடுநோக்குத் திட்டத்தை சீன இருப்புப்பாதை தலைமை கூட்டு நிறுவனம் 2015ஆம் ஆண்டு செயல்படுத்தி, வெளிநாடுகளின் அதிவிரைவு இருப்புப்பாதை சந்தையை முக்கியமாக விரிவாக்கி, சீன இருப்புப்பாதை தொழில் வெளிநாடுகளில் நுழையும் காலடியை விரைவுபடுத்தும் என்று ச்செங் குவாங் ச்சூ தெரிவித்தார்.

சீனாவின் இருப்புப்பாதை, முன்னேறிய தொழில் நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. சீன உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. உயர் வேக தொடர் வண்டி உள்ளிட்ட சாதனத் தயாரிப்புத் துறை உலகில் நுழைவதை விரைவுபடுத்த வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், தலைமையமைச்சர் லீ கெச்சியாங் உள்ளிட்ட சீனத் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். சீனாவின் இருப்புப்பாதை துறை பற்றி அவர்கள் பல தூதாண்மை நடவடிக்கைகளில் கலந்து கொண்ட போது அறிமுகப்படு்த்தினர். சீன இருப்புப்பாதைத் துறை வெளிநாடுகளில் நுழைவது, சீனாவின் நலன்களுக்குப் பொருந்தியதாக இருக்கும். அதே வேளையில், வெளிநாட்டு சந்தையை விரிவாக்குவதில் சீன இருப்புப்பாதை தலைமை கூட்டு நிறுவனத்துக்கு முக்கிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு, சீன இருப்புப்பாதை தலைமை கூட்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருப்புப்பாதை திட்டப்பணிகளை அதிகரிக்கும் என்று ச்செங் குவாங் ச்சூ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040