• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 24ஆவது உச்சிமாநாடு முடிவு
  2015-02-01 15:30:51  cri எழுத்தின் அளவு:  A A A   
இரண்டு நாட்கள் நீடிக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 24ஆவது உச்சிமாநாடு 31ஆம் நாள் எத்தியோபியாவின் தலைநகர் அட்டிஸ் அபாபாவில் நிறைவடைந்துள்ளது.

இக்கூட்டத்தில் 2063ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்காவின் வளர்ச்சி நோக்கம் என்ற திட்டவரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்குவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. மகளிருக்கு அதிகாரமளித்தல், ஆப்பிரிக்காவின் வளர்ச்சி முதலிய அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஆழமாக விவாதித்துள்ளனர். அதன் அடிப்படையில், மகளிர்களும் குழந்தைகளும் ஆப்பிரிக்காவின் முக்கிய செல்வம். மகளிருக்கு அதிகாரமளித்தல், பாலினச் சமத்துவத்தை முன்னேற்றுவித்தல் முதலியவற்றின் மூலம், ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுக் கருத்துக்களை எட்டியுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040