• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானில் பூண்டு கலக்கப்பட்ட கோலா
  2015-02-11 16:54:57  cri எழுத்தின் அளவு:  A A A   

பூண்டு என்ற பெயரை நாம் அனைவரும் அறிவோம். நமது உணவு வகைகள் பெரும்பானவற்றில் பூண்டும் ஓர் அங்கம் வகிக்கிறது. உணவு செறிப்பதற்கு பூண்டு உகந்த பொருள் என்பதால் அதனை நாம் அன்றாடும் எடுத்து வருகிறோம். ஆனால், நுகர்வோரை மேலும் கவரும் வகையில் பூண்டு கலக்கப்பட்ட குளிர்பானமான பூண்டு கோலாவை ஜப்பான் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானின் அமோரி நகரில் அறிமுகம் இந்தக் கோலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அது ஏன் அமோரி நகரில் மட்டும் பூண்டு கோலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வி நமது மனதில் எழாமல் இருக்காது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ என்றால், ஜப்பானில் பூண்டின் தலைநகர் அமோரியாம். இது, பூண்டு நகர் என்றுகூட அழைக்கப்படுகிறதாம். ஒவ்வொரு ஜூலை திங்களிலும், அதிக அளவிலான பூண்டினை அமோரி நகரில் அறுவடை செய்யப்படுகிறது.

அதிக அளவிலான பூண்டு விளைச்சலைப் பயன்படுத்தி, அந்த நகரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் பூண்டு பீர், பூண்டு ஐஸ் கிரீம் என பல்வேறு வகைகளை ஏற்கெனவே அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்தவரிசையில் தற்போது பூண்டு கோலா அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கோலாவுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் எனத் தெரியாது. ஆனால், கண்டிப்பாக புதுமை விரும்பிகளான ஜப்பானியர்கள் மத்தியில் இது பெரும் புகழைப் பெறும் என்று அந்நிறுவனம் முழுமையாக நம்பியுள்ளது.

இந்த கோலாவின் உள்ளூர் பெயர் என்ன தெரியுமா ஜேட்ஸ் டக்கோலா. ஜேட்ஸ் என்பது ஆச்சரியம் ஏற்படும் உருவாகும் சத்தமாம். இந்த கோலாவை ஒருவர் குடிக்கும்போது கண்டிப்பாக ஒருவர் ஆச்சரியப்பட்டே தீர வேண்டுமாம். அதனால் அந்த நிறுவனம் இந்தப் பெயரையும் இணைத்துள்ளது. எப்படியோ குடிக்கும் கோலா நன்றாக செரித்தால் சரி என்று நுகர்வோர் முனுமுனுக்கத் தொடங்கி விட்டனராம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040