• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசுப் பணியறிக்கையில் 'புதிய வார்த்தைகள்'
  2015-03-05 19:23:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் வெளியிட்ட அரசுப் பணியறிக்கையில் பல புதிய வார்த்தைகள் முதல்முறையாக இணைக்கப்பட்ருந்துள்ளன.

படைப்பாளர்

தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி லியுச்சுன் பேசுகையில், 'படைத்தவர்களை' ஊக்குவிக்கவும் சிறிய தொழில் நிறுவனங்களை பெரிதும் வளர்க்கவும், நாடு செயல்பட்டு வருகிறது. இது, சீன இளைஞர்கள் தொழில் நடத்துவதையும் புத்தாக்கம் செய்வதையும் ஊக்குவிப்பதாக அமையும் என்று தெரிவித்தார்.

சமூகப் பதிவுக் குறியீடு

தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி சாய்ஜின்ஆன் பேசுகையில், நாடளவில் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகப் புகழ் குறியீட்டு முறையை உருவாக்க வேண்டும். இதன் அடிப்படையில், குடிமக்களும் நிறுவனங்களும் சொந்தமான புகழ் குறியீட்டு எண்ணை கொள்ளும். இதனால் முறைகேடுகள் மறைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

ஸ்மாட் நகரம்

தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி ரான்ரான் பேசுகையில், ஸ்மாட் நகரம் என்ற வசதிகளைக் கட்டியமைப்பதன் மூலமாக, பொது மக்களின் வாழ்க்கை மேலும் வசதியை பெறும். அதேவேளையில், நகரங்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் பேணிக்காக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

சீனத் தயாரிப்பு 2025

தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி லீ துங்ஷெங் பேசுகையில், சீனத் தயாரிப்பு 2025 என்பது, சீனாவின் தயாரிப்புத் துறையில் எதிர்வரும் 10 ஆண்டுகளின் வளர்ச்சித் திட்டத்தின் திசையாகும் என்று தெரிவித்தார்.

இணையம்+

தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி மா ஹுவாட்டெங் பேசுகையில், இணையம்+ என்பது, இணையமும் பாரம்பரிய தொழில் துறைகளும் ஒன்றிணையும் விளைவாக அமையும். குறிப்பாக, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சில்லறை விற்பனை போன்ற துறைகளில் நடமாடும் இணையம் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் வாழ்க்கை தொடர்பான சேவை, இணையத்துடன் ஒன்றிணையும். மக்களின் வாழ்க்கை மேலும் வசதியாக இருக்கும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040