• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் சட்டம் இயற்றல் துறையின் சீர்திருத்தம்
  2015-03-09 15:13:33  cri எழுத்தின் அளவு:  A A A   

சட்டம் இயற்றும் சட்டத்தின் திருத்த வரைவு பற்றிய விளக்கங்களை, சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் சுமார் 3000 பிரதிநிதிகள் 8ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கேட்டு அறிந்து கொண்டனர். 12-ஆவது தேசிய மக்கள் பேரவை பதவியேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் பற்றிய கருத்துருவைப் பரிசீலனைச் செய்வது இதுவே முதல்முறை. இந்த சட்ட வரைவு ஒப்புக்கொள்ளப்படும் நிலையில், திருத்தப்படும் சட்டம் இயற்றும் சட்டம் என்பது, சீனாவில் 2015ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள முதலாவது சட்டம் என்பது குறிப்பிடத் தக்கது.

2015ஆம் ஆண்டின் துவக்கத்தில், நிதித் துறை அமைச்சகம் இரு மாதங்களுக்குள்ளாகத் தொடர்ந்து மூன்றாவது முறை எண்ணெய் வரியை உயர்த்தியுள்ளது. இது, பொது மக்களிடையே கருத்துவேற்றுமைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வினால், வரிச் சட்டத்தின் சீர்திருத்தம் பற்றிய வேண்டுகோளை தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான சாவ் துங்லிங் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாவ் துங்லிங் உள்ளிட்ட 31 பிரதிநிதிகளும் இணைந்து சட்ட முன்மொழிவை வழங்கியபோது, வரிச் சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை தேசிய மக்கள் பேரவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த சட்ட முன்மொழிவின் கருத்து, தற்போதைய சட்டம் இயற்றும் சட்டத் திருத்த வரைவில் காணப்படுகிறது.

சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் லீ ஜியன்கோ 8ஆம் நாள் மாலை சட்டம் இயற்றும் சட்டத்தின் திருத்த வரைவு குறித்த விளக்கங்களை கொடுத்தார். வரி வசூலிப்பதற்கு சட்ட அனுமதி வேண்டும் என்ற வரைவு பற்றி அவர் பேசுகையில்,

வரி வகைகளின் வகுத்தல், நிறுத்தம், நிர்வாகம் தொடர்பான அடிப்படை முறைகள், சட்டம் மூலம் விதிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றும் சட்டத்தின் திருத்த வரைவில் தெளிவுபடுத்தப்படுகிறது என்றார்.

இது பற்றி, தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான சாவ் துங்லிங் குறிப்பிடுகையில்,

வரி செலுத்துவது, குடிமக்களின் கடமை. ஆனால், வரி வசூலிப்பதன் காரணம், வழிமுறை உள்ளிட்டவை அனைத்தும், தேசிய மக்கள் பேரையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின்படி விதிக்கப்பட வேண்டும் என்று வலிறுத்தினார்.

சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தேசிய மக்கள் பேரவை திரும்பப் பெறுவது குறித்து, இப்பேரவையின் செய்தித் தொடர்பாளர் ஃபூ யிங் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரிச் சட்டம் இயற்றும் திட்ட வரைவு மற்றும் காலத்தவணை ஆகியவற்றை முதல்முறையாக அறிமுகப்படுத்தினார். அவர் கூறியாவது

எதிர்காலத்தில், புதிய வரி வசூலிக்கும் போது, தேசிய மக்கள் பேரவையும் பேரவையின் நிரந்தர கமிட்டியும் இதற்கு உகந்த சட்டவிதிகளை வகுக்கும். தற்போது செயல்படும் விதிகளைத் திருத்தம் செய்யும்போது, சட்டம் ரீதியான அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த திட்டவரைவின்படி, சட்டப்படி வரி வசூலிப்பதற்கு தீர்ப்பு அளிக்கும் கொள்கையை 2020ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சீனாவின் சீர்திருத்தம் ஆழமாகி வருவதுடன், சட்டம் இயற்றும் பணிகளின் பங்களிப்பு மென்மேலும் முக்கியமானது என்று தேசிய மக்கள் பேரையின் நிரந்தர கமிட்டியின் சட்டப் பணிப் பிரிவின் ஆய்வகத்தின் தலைவர் லியங் யிங் கருத்து தெரிவித்தார். சீர்திருத்தங்களை முன்னேற்றும் வகையில், சிறந்த சட்டங்கள் இதற்கு உத்தரவாதம் அளிக்க தேவை என்று பொதுவாக கருதப்படுகிறது.

அரசுத் துறை வாரியங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது என்பது, சட்டம் இயற்றும் சட்டத்தின் நடப்புத் திருத்தத்தில் அதிக கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சமாகும். இந்த திருத்த வரைவின்படி, சட்ட ஆதரவு பெறாத நிலையில், பல்வேறு நிலை அரசுகள் வெளியிடும் விதிகளில் குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது.

சட்டம் இயற்றும் சட்டத்தின் திருத்தம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பிறகு, பொருளாதார மற்றும் சமூகச் செயல்பாடுகளை நிர்வாகிக்கும் பல்வேறு நிலை அரசுகளும் அரசு அலுவலர்களும் பெரும் அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டும். சட்ட ரீதியான வழிமுறைகளில் சீர்திருத்தத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றுவதில் அவர்கள் முயற்சிகள் செய்ய வேண்டும் என்று லியாங் யிங் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040