உலகில் அதிக வயதுடைய மனிதர், வானொலிப் பெட்டி, நகரம் என பலவற்றை நாம் கேட்டிருப்போம். ஆனால், உணவாக உட்கொள்ளக் கூடிய பர்கரை அந்தப் பட்டியலில் கேட்டிருக்கவே முடியாது. ஆனால், தற்போது அந்த அதிசியத்தையும் நமது காதுகள் நம்பித்தான் ஆக வேண்டும்.
20 ஆண்டு வயதுடைய பர்கர், ஆஸ்திரேலியாவில் உள்ளது. நீண்ட ஆண்டுகளாக பாதுகாக்கப்ப ட வேண்டும் என்ற நோக்கில் இந்த பர்கர் தயாரிக்கப்பட வில்லை. பர்கரை வாங்கிய ஆஸ்திரேலிய இளைஞர்களான கேஸி டீனும், எடுவார்டு நிட்ஸும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மீண்டும் எடுத்து உட்கொள்வதற்கு மறந்து விட்டனர். அவர்கள் தவறு செய்து விட்டனர். மானுடத் தவறுகள் எப்படி சில நேரம் அதிசியமாகிறது என்பதை இந்த பர்கரின் மூலம் நாம் அறிந்த கொள்ள முடியும்.
அந்த பர்கரை விட சுவையான செய்தி என்னவென்றால், அது குறித்து பாடல் ஒன்றை டீனும், நிட்ஸும் உருவாக்கி, அந்தப் பாடல் சர்வதேச அளவில் பெரும் புகழைப் பெற்றதுதான். அதன்மூலம் ஈட்ட உள்ள தொகையை நல்வழியில் செலவழிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
20 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த பர்கர் கெட்டுப் போகாமால் அப்படியே உள்ளது. ஆனால், பர்கர் சற்று கடினமாக மாறிவிட்டாதக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிறகு, தற்போதுதான் தெரிந்து விட்டதே,. அதை உட்கொள்ள வேண்டியதுதானே என்று அருகில் உள்ளோர் கேட்கத் தொடங்கி விட்டனராம்.
ஆனால், அது எங்களின் நண்பரைப் போன்று மாறிவிட்டது. யாராவது நண்பரை உண்பார்களா என்று நகைச்சுவை கலந்த பாசத்துடன் தெரிவிக்கிறார் டீன்.