• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி சீனத் தேசிய பேரவை பிரதிநிதிகளின் கருத்துக்கள்
  2015-03-11 16:36:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சில நாட்களுக்கு முன், சீனத் தேசிய மக்கள் பேரவை பிரதிநிதிகளிடையே நீல வானம் பற்றி பெய்ஜிங்கின் இரு கூட்டத்தொடர்களின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இக்காலத்தில் பெய்சிங்கின் வானிலை வெயிலாக இருக்கிறது. "இரு கூட்டத்தொடர்களின் போது, வானில் நீல நிறம்" தோன்றி, பெய்சிங் மிகவும் அழகாக இருக்கின்றது என்று சிங்கியாங்கைச் சேர்ந்த தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதி ரெஹன்குரி யீமிர் அம்மையார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏபெக் அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் பெய்சிங்கில் நடைபெற்ற போது பெய்சிங்கில் தெளிந்த நீல நிற வானம் காணப்பட்டது. அப்போது, "ஏபெக் நீல நிறம்" என்ற சொல் உருவாகியது. ஆனால் வெயிலான நாட்கள் குறைவாக தொடர்ந்தன.

புள்ளி விபரங்களின்படி, 2014ஆம் ஆண்டு சீனாவில் உள்ள 161 நகரங்களில், குறிப்பிட்ட வரையறையின்படி காற்று தரம் மோசமாகியுள்ள நகரங்கள், 90 விழுக்காட்டை தாண்டியுள்ளன. காற்று மாசுபாட்டைத் தவிர, சீனாவில் நீர் மாசுபாடு, மண் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் மிக முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், வாஹாஹா குழுமத்தின் தலைமை இயக்குநருமான ச்சுங் சிங் ஹோ இது பற்றி கூறியதாவது:

"முன்பு, உணவு உடைப் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், சீனாவின் வளர்ச்சிப் போக்கில், மாசுபாட்டுப் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தப்பட வில்லை. தற்போது இது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது இயல்பானது. ஒவ்வொரு நாடும், வளர்ச்சிப் போக்கில், இத்தகைய காலக் கட்டத்தைக் கடக்கின்றது. தற்போது, சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் எனும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

வளர்ச்சி மாதிரியை மாற்றினால்தான், சுற்றுச்சூழல் மாசுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று சீன தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், சியாங் சு மாநிலத்தின் சுற்றுலா பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவருமான சேன் மங் மங் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"முன்னேறிய ஆக்கத்தொழில் துறையி்ன் வளர்ச்சியை விரைவுபடுத்த இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். தொழில் நுட்ப புத்தாக்கம், சேவைத் தொழில் மற்றும் இணையப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முறையை மாற்றம் செய்து, அதிக மாசு பொருட்களை வெளியேற்றும் தொழில் நிறுவனங்களை பெருமளவில் குறைக்க வேண்டும்" என்றார்.

தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், யுன்னான் மாநிலத்தின் தே ஹோங் தெய் இனம் மற்றும் சிங் போ இனத் தன்னாட்சி சோத் தலைவருமான குங் சிங் செங் கூறியதாவது:  

"வளர்ச்சியை விரைவாக வளர்க்கும் அதே வேளையில், தரமும் பயனும் மிக்க, தொடரவல்ல வளர்ச்சியுடைய திட்டப்பணிகளையும், தொழில்களையும் முதன்மையான இடத்தில் வைக்க வேண்டும். உயிரின வாழ்க்கை சூழலுக்குத் தீ்ங்கு விளைவிக்கக்கூடிய திட்டப்பணியை உட்புகுத்தக்கூடாது" என்று கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040