நாம் வாழ்ந்து வரும் புவிக்கு அடியில் பல அரிய புதையல்கள் புதைந்துள்ளன. ஆராய்ச்சியாளர்களின் அகழ்வாராய்ச்சியின்போது பல்வேறு புதையல்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சௌகோ பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது தனது பளபளப்பை இழக்காத வெண்கல வாள் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, 20-க்கும் மேற்பட்ட சமாதிகள் அடங்கிய கல்லறை கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் இந்த வாள் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், இறுதிச் சடங்கில் பயன்படுத்தும் வேறுவகை பொருள்களும் கண்டறியப்பட்டன. இந்த கல்லறை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அப்படியெனில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது புருவத்தை உயர்த்தும் செய்தி என்றால், அது தனது புதுப்பொலிவை இழக்காமல் அப்படியே இருப்பது அதினினும் அதிசியமான செய்திதான்.