கோழி என்ற கூறியவுடன், முதலில் நினைவுக்கு வருவது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்றுதான். ஆனால் அந்த முட்டையின் வடிவம் வட்டவடிவம் இல்லை, அது நீள் வடிவிலானாவை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், நமது கருத்துகளை கோழி ஒன்று தவறு என்று நிரூபித்து விட்டது.
இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள லட்சிங்டான் பகுதியில் உள்ள கோழிதான் இத்தகைய செயலைப் புரிந்துள்ளது. அந்தக் கோழி சமீபத்தில் இட்ட முட்டையின் வடிவம், வட்ட வடிவமானது. இந்த கோழியின் பெயர் பிங் பாங்.
இந்த அதிசியமான செயலலால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் பிங் பாங்கின் உரிமையாளர் கிம் பிரௌடன்.
சரி, முட்டை எப்படி இருந்தால் என்ன, வழக்கம்போல அதனை கேக் தயாரிக்க பயன்படுத்த வேண்டியதுதான் என எண்ணிய பிரௌடன், முட்டையை உடைக்கத் தயாராகி விட்டார். ஆனால், இந்த தகவலை அறிந்த அவரது நண்பர், முட்டையை உடைக்காதே, இதேபோன்றதொரு முட்டை இதற்கு முன் சுமார் 6 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த முட்டையையும் அவ்வாறு ஏலத்தில் விடுவோம் என்று கூறியுள்ளார். இது சரி என்று படவே, பிரௌடன் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இந்த முட்டையை 200 ரூபாய்க்கு யாராவது ஏலத்தில் எடுப்பார்களா என்றுதான் நான் கருதினேன். ஆனால், முட்டைக்கான ஏலத் தொகையை என்னால் நம்பவே முடியவில்லை என்று அவர் கூறினார்.
முட்டையை உரிமையாக்க கடும் போட்டி நிலவியது. வட்டவடிவான முட்டை என அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் ஏலத்துக்கு விண்ணப்பம் செய்தனர்.
இறுதியில் அந்த முட்டை எத்தனை விலைக்கு ஏலம் போனது என அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளீர்களா நேயர்களே.
அதுதான் பிரௌடனுக்கும் ஆச்சர்யம். சுமார் 32 ஆயிரத்துக்கு அந்த முட்டையை ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இத்தனை தொகை அளித்து முட்டை உரிமையாக்கிய அவர், அதை சமைத்தா சாப்பிடப் போகிறார்.