• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய முதலீட்டு வங்கியில் புதிய ஆரம்ப உறுப்பு நாடுகள்: ஸ்பெயின், தென்கொரியா, ஆஸ்திரியா
  2015-04-11 19:13:26  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் ஆரம்ப உறுப்பு நாடுகளாக, ஸ்பெயின், தென்கொரியா, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்று சீன நிதி அமைச்சகம் 11ஆம் நாள் அறிவித்துள்ளது.

தற்போது, இவ்வங்கியை ஆரம்பித்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஓசியானியா ஆகிய ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாடுகளும் பிரதேசங்களும் இவ்வங்கியில் சேர விண்ணப்பித்துள்ளன.

அதன் ஆரம்ப உறுப்பு நாடுகளின் இறுதி எண்ணிக்கை மிக முன்னதாகவே ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040