• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டம் மற்றும் ஒரு பாதை எனும் திட்டப்பணி தொடர்பான ஒத்துழைப்பு
  2015-04-13 16:13:10  cri எழுத்தின் அளவு:  A A A   

பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21-ஆவது நூற்றாண்டு கடற்வழிப் பாட்டுப் பாதை தொடர்பான தொலைநோக்கு திட்டத்தின்படி,அடிப்படை வசதிகளை இணைப்பதற்கான கட்டுமானத்தை முன்னேற்றுவது உள்ளிட்ட எட்டு துறைகளில், தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்புகளை சீனா வலுப்படுத்தும். இந்த தொலைநோக்கு திட்டத்தை முன்னேற்றும் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் சீனப் பணக்குழு ஒருவர் அண்மையில் இதனைத் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை முன்னேற்றுவதை தவிர, எரியாற்றல், நிதி, மானிடவியல் முதலிய துறைகள், இந்த எட்டு துறைகளில் இடம்பெறுகின்றன. இதில், அடிப்படை வசதி மற்றும் எரியாற்றல் துறை ஒத்துழைப்புகள் குறித்து இந்தப் பொறுப்பாளர் மேலும் கூறுகையில், அடிப்படை வசதிகளுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில், சீனாவிலிருந்து பால்டிக்கடலுக்குச் செல்லும் வழி, சீனாவிலிருந்து பாரசீக வளைகுடாவுக்குச் செல்லும் வழி, சீனாவிலிருந்து இந்தியப்பெருங்கடலுக்குச் செல்லும் வழி ஆகிய மூன்று கடற்வழிகள், முக்கியமாகவும் விரைவாகவும் உருவாக்கப்படும். எரியாற்றல் ஒத்துழைப்பை அதிகரிப்பதில், மத்திய ஆசியா, மேற்காசியா, ரஷியா ஆகிய பிரதேசங்களுடன், முக்கிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, எரியாற்றல் தொலைநோக்கு போக்குவரத்து தரைவழிகளையும் சீனா அதிகரிக்கும். அத்துடன், கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் பாதை கட்டுமானம் தொடர்பாக, தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து சீனா ஒத்துழைப்பை மேற்கொள்ளும். மேலும், வெளிநாட்டிலுள்ள கனிமவளம் தொடர்பான ஒத்துழைப்பு நிலைமைகளையும் சீனா உயர்த்தும் என்று கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் தொலைநோக்குத் திட்டமானது, 60க்கு அதிகமான நாடுகளுடன் தொடர்புடையது. இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை, 440கோடியாகும். மொத்த உற்பத்தி மதிப்பு, சுமார் 2இலட்சத்து 10ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். இந்த நிலைமையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் தொலைநோக்குத் திட்டம், தொடர்புடைய நாடுகளுக்கு அதிகமான புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்று சீனச் சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் நிரந்தர செயல்குழுத் துணைத் தலைவர் ச்சாங் சியெள ஜியாங் கூறினார்.

இந்த தொலைநோக்கு திட்டம், வலுவான வளர்ச்சி போக்கில் இருக்கும் கிழக்காசியப் பொருளாதார மண்டலத்தையும்,. மேற்கில், வளர்ச்சி அடைந்துள்ள ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பொருளாதார மண்டலத்தையும் இணைத்துள்ளது. இந்த நிலைமையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் தொலைநோக்கு திட்டத்தால், உலகில் உயிராற்றல் மிகுந்த சீரான வளர்ச்சி எதிர்காலம் கொண்ட பெரிய பொருளாதாரப் பாதை உருவாக்கப்படும் என்றும் அவர் நம்புகின்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040