குழந்தை செல்வம் என்பது மானிடர்களுக்கு இறைவன் அளித்த அற்புதமான வரம் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். இந்த செல்வத்தைப் பெறத் தவிக்கும் சிலர், மருத்துவர்களை அனுகவும் செய்வர். ஆனால், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 65 வயது பெண்மனியான அனெக்ரட் ராவ்னிக்குக்கு இந்த செல்வம் மிகுந்து உள்ளது.
ஏற்கெனவே 13 குழந்தைகளுக்குத் தாயான ராவ்னிக், தற்போது மீண்டும் தாயாகியுள்ளார். மருத்துவ சோதனையில் நான்கு குழந்தைகளுக்கு ராவ்னிக் தாயாக உள்ளது தெரிய வந்துள்ளது.
ராவ்னிக்கின் இளம் மகள், தனக்கு விளையாடுவதற்கு ஒரு தம்பியோ அல்லது தங்கையோ வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான முயற்சிகளை ராவ்னிக் மேற்கொண்டிருந்தார்.
ரஷியன் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றுத்தரும் ஆசிரியரான ராவ்னிக், 65 வயதில் மீண்டும் தாயாகியுள்ளது, தனக்கு பிரச்னையில்லை என்று கூறியுள்ளார். அனைத்தும் நன்றாக நடந்தால், வரும் கோடைக்காலத்தில் அவர் குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அவ்வாறு நிகழ்ந்தால், உலகிலேயே, அதிகமான வயதில் 4 குழந்தைகளுக்கு தாயானவர் என்ற பெருமையை ராவ்னிக் பெறுவார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 13 ஆவது குழந்தைக்கு தாயானபோது ராவ்னிக் கூறுகையில், எனது தொடக்க காலத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று கருதினேன் என்றார்.
13 குழந்தைகளுடன் இவருக்கு 7 பேரக் குழந்தைகளும் உள்ளனர். ராவ்னிக்குக்கு கிடைத்த மற்றும் கிடைக்கக் கூடிய குழந்தைச் செல்வம் குறித்த செய்தியை ஜெர்மன் நாட்டவர்கள் அதிர்ச்சியுடன் உள்ளனராம்.