• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றக்கூடும் கல்வியின் உலகமயமாக்கம்
  2015-04-23 19:40:06  cri எழுத்தின் அளவு:  A A A   
கல்வி ஒத்துழைப்பானது, ஒரு மண்டலம் மற்றும் பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் இத்தொலைநோக்குத் திட்டத்தில் கலந்து கொள்வதைத் தூண்டும் அமைதியான வழிமுறை என்று குன்மிங் கழகத்தின் சர்வதேச பரிமாற்ற ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் வாங் வென்ஜுன் 23ஆம் நாள் கூறினார். உலகமயமாக்க பள்ளி கல்விக்கான சர்வதேச கூட்டத்தில் அவர் முன்வைத்த இந்தக் கருத்தை, இந்தியா மற்றும் தாய்லாந்தின் அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகிய 3 நாடுகளின் அறிஞர்கள் வியாழக்கிழமை குன்மிங் கழகத்தில் ஒன்றுசேர்ந்து, உலகமயமாக்க பள்ளி கல்விக்கான செயல் திட்டம் பற்றி விவாதம் நடத்தினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040