• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டத்தின் பயன்
  2015-04-29 14:12:09  cri எழுத்தின் அளவு:  A A A   
முதல் காலாண்டில் சீனாவுக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுக்கிலுள்ள நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகத் தொகை 23 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலரை எட்டி, சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகையில் 26 விழுக்காடு வகிக்கிறது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷென் டான்யாங் புதன்கிழமை கூறினார்.

இந்த நாடுகளுக்கு சீனா செய்த ஏற்றுமதியின் மதிப்பு 14 ஆயிரத்து 450 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 10 விழுக்காடு அதிகரித்தது. இந்த நாடுகளிலிருந்து சீனா பெற்ற இறக்குமதி மதிப்பு 9150 கோடி அமெரிக்க டாலரை எட்டி, சீனாவின் மொத்த இறக்குமதி மதிப்பில் 23.4 விழுக்காடு வகிக்கிறது.

மேலும், முதல் காலாண்டில் இந்த நாடுகள் சீனாவில் நிறுவிய அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 457 ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட இது 18.4 விழுக்காடு அதிகரித்தது. நடைமுறையில் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை 168 கோடி அமெரிக்க டாலராகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040