காலம் தாழ்ந்திய செயல் என்ற ஒன்று எதுவும் இல்லை. இப்போதாவது அதை செய்து முடித்தோமே என்பதுதான் பெருமை என்று பயனுள்ள வாக்கியத்தை நாம் படித்திருப்போம். அதைப் போல, வயது வேண்டுமானாலும் கூடி செல்ல்லாம், ஆனால், எனது மனது என்றுமே இளமைதான் என்று நிரூபித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 103 வயது அம்மையார்.
விஸ்கான்சின் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஹண்ட். இவர், எட்டாம் வகுப்புக்குப் பின்னர் தனது பள்ளிப் படிப்பை தொட முடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், அவருடன் பிறந்த 8 சகோதர, சகோதரிகளை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு மேரி ஹண்டைச் சேர்ந்த்தானால் அவரது பள்ளிக் கனவு தகர்ந்து விட்டது.
தனது வாழ்க்கை கடமைகளை முடித்த அவருடைய மனதின் ஆழத்தில் பள்ளிக் கனவு மட்டும் அப்படியே இருந்துள்ளது. இதனால், நூறு வயதைக் கடந்தபோதிலும் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து, பள்ளிப் படிப்பை அவர் முடித்துள்ளார்.
அவர் கூறுகையில், படிப்பு எனக்கு வேண்டும் என்று எப்போதும் நான் நினைத்திருப்பேன். ஆனால், என்னால் முழுமையாக அப்போது தொடரமுடியவில்லை. நூறுவயதைக் கடந்தபோதும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளேன் என்றார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் இணைவாரா என்று அவர் தெரிவிக்கவில்லை. யாருக்குத் தெரியும், உடல் ஒத்துழைத்தால் கல்லூரி படிப்பையும் ஹெண்ட் முடித்தால் ஆச்சரியமில்லை.