• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனிதரைப் போல தண்ணீர் குடித்த குரங்கு
  2015-04-29 17:14:42  cri எழுத்தின் அளவு:  A A A   

குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடினால், ஏன் குரங்கு மாதிரி தாவிகிட்டே இருக்க என்று பெற்றோர்கள் திட்டுவர். மனிதன் குரங்கிலிருந்துதான் வந்துள்ளான் என்பதை நினைவுபடுத்துவே இதுபோன்ற திட்டுகிறோமோ என்னவோ. ஆனால், குரங்கிலிருந்து வந்த மனிதன் இத்தனை விஞ்ஞான புரட்சிகள் செய்யும்போது, மரத்திலே தாவிக் கொண்டிருக்கும் குரங்குகளும் அவ்வப்போது நம்மை வியப்பும் செயலில் ஆழ்த்துகிறது.

இந்தோனேசியாவின் பாலி நகர். சுட்டெறிக்கும் மதிய நேரம். பாதையில் நடமாடிக் கொண்டிருந்த குரங்குக்கோ பெரும் தாகம். பிறகு என்ன, ஒரு மனிதர் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை வாங்கியது. ஆனால், அந்த பாட்டிலின் மூடியை எப்படி குரங்கு திறக்கும் என அங்கிருந்தவர்களுக்கு ஒரு கேள்வி.

ஆனால், எவ்வித சிக்கலுமின்றி, மனிதர்களாகிய நாம் எப்படி மூடியைத் திறந்து குடிநீர் அருந்துவோமோ அவ்வாறே குரங்கும் அருந்தியது. தண்ணீரை சிந்தாமல் குரங்கு குடித்த இக்காட்சியை அப்படியே சிதறாமல் படம் பிடித்துள்ளார் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040