வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்ஃபியூஷியஸின் இலக்கிய தொகுப்பிலுள்ள 5 பகுதிகளை மனப்பாடம் செய்தால் கன்ஃபியூஷியஸ் கோயில், கன்ஃபியூஷியஸ் இல்லம், கன்ஃபியூஷியஸ் குடும்பக் கல்லறை ஆகிய மூன்று காட்சித்தலங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். கன்ஃபியூஷியஸின் ஊரான ஷான்தோங் மாநிலத்தின் ஜுஃபு நிர்வாகம், கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கிய இந்த நடவடிக்கை வெளிநாட்டுப் பயணிகளிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 39 பயணிகள் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டு, இலவசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
1 2