• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதல் சீன திபெத் சுற்றுலா பண்பாட்டுச் சர்வதேசக் பொருட்காட்சி
  2015-05-05 17:20:35  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் நாள் வரை, முதல் சீன திபெத் சுற்றுலா பண்பாட்டுச் சர்வதேசப் பொருட்காட்சி, லாசா நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இப்பொருட்காட்சி, சீன பண்பாடு அமைச்சகம், சீன தேசிய சுற்றுலாப் பணியகம், திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூமியில் புனித இடம், வானில் திபெத் என்பது, அதன் தலைப்பு ஆகும். இந்த மூன்று நாட்களில், துவக்க விழா, கண்காட்சி, கருத்தரங்கு, பொருளாதாரப் பேச்சுவார்த்தை முதலிய பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திபெத் சுற்றுலா, பண்பாடு, தனிச்சிறப்பு வாய்ந்த உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் செல்வாக்கும் புகழும் பன்முகங்களிலும் உயர்ந்துள்ளன.

25ஆம் நாள் நடைபெற்ற துவக்க விழாவில், சீன பண்பாடு அமைச்சர் சாய்வூ, சீன தேசிய சுற்றுலாப் பணியகத்தின் துணை தலைவர் தூசியாங், நேபாள துணை அரசுத் தலைவர் பரமனன்ட் ஜ்ஹா முதலியோர் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினர். திபெத்திற்குப் பரந்த நிலப்பரப்பு உண்டு. இங்கு, தனிச்சிறப்பு வாய்ந்த அழகான இயற்கைக் காட்சிகளும், ஆழ்ந்த கலாச்சார பாரம்பரியமும் இடம்பெறுகின்றன என்று சீன பண்பாடு அமைச்சர் சாய்வூ கூறினார். தனது உரையில் திபெத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலாப் பண்பாட்டு மேம்பாடுகளை அவர் இவ்வாறு தொகுத்தளித்தார்.

26ஆம் நாள் காலை, கண்காட்சி நடவடிக்கைகள், திபெத் அருங்காட்சியகத்தில் துவங்கியது. இதில் சிறப்பான பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ கண்காட்சி, தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டுத் தொழில்கள் மற்றும் முக்கிய திட்டப்பணிகளின் அறிமுகம், சிறப்பான தொல்பொருள் கண்காட்சி, திபெத்தின நாடகக் கண்காட்சி ஆகிய பகுதிகள் இடம்பெற்றன. தவிர, திபெத்தின மொழிக் கையெழுத்து, திபெத்தின இசைக் கருவி, திபெத்தின ஆடை முதலியவற்றையும், முகமூடி, தாங்கா ஓவியம், திபெத் நறுமணப்பொருள் முதலியவற்றைத் தயாரிப்பதையும் உள்ளூர் கலைஞர்கள் இக்கண்காட்சியில் காட்டியுள்ளனர். அருங்காட்சியகத்துக்கு வெளியே, திறந்த வெளி காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திபெத்தின மொழிக் கையெழுத்து, திபெத் நறுமணப்பொருட்களின் தயாரிப்பு முதலியவற்றில் பார்வையாளர்கள் நேரில் கலந்து கொண்டு, திபெத்தின பண்பாட்டை மேலும் நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.

அதோடு, பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அறிவாளர்கள், லாசா உணவு விடுதிக்குச் சென்று, கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். திபெத் சுற்றுலா வளர்ச்சி நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்பு, சீன-வெளிநாட்டு சுற்றுலா ஒத்துழைப்பு, திபெத்தியல் ஆராய்ச்சி முதலிய தலைப்புகள் பற்றி, அவர்கள் ஆழமாக விவாதித்தனர். உயிரின வாழ்க்கைச் சூழல் மற்றும் சிறந்த பாரம்பரிய பண்பாட்டைப் பேணிக்காப்பது, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது ஆகியவை, திபெத் சுற்றுலா வளர்ச்சியின் கோட்பாடாகும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசாங்க தலைவர் லுவோசங்ஜியாங்சூன் தெரிவித்தார்.

இப்பொருட்காட்சியின் நிறைவு விழா, 27ஆம் நாளிரவு, லாசா நகரில் நடைபெற்றது. 33 பொருளாதார ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040