• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோடியின் சீனப் பயணம் பற்றிய அறிவுப் போட்டி
  2015-05-14 14:47:39  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம் நேயர்களே. மே திங்கள் அறிவுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு மிக்க நன்றி. மே திங்களில் சீன-இந்திய இரு நாடுகளுக்கிடையிலான மிக முக்கிய செய்தி, மோடியின் சீனப்பயணம் தான். அதனால், மே திங்களின் அறிவுப் போட்டி, அது பற்றி கேட்கப்பட உள்ளது. இவ்வறிவுப் போட்டி, வானொலி மற்றும் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்படும். நீங்கள் நிகழ்ச்சியை கேட்பது மற்றும் இணையப் பக்கத்தை பார்ப்பதன் மூலம், சரியான பதில் அளிக்கலாம். முன்பு போன்றே, சரியான பதில்களை அளித்த நேயர்களில் முதல் 3 பேருக்கு முதல் நிலை பரிசுப் பொருட்களை வழங்குவோம். அடுத்த 10 நேயர்களுக்கு சிறந்த பரிசு பொருட்களை வழங்குவோம். கீழே 3 கேள்வி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 22ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறும். நேயர்கள் அனுப்பிய வானஞ்சல் கடிதங்களின் முத்திரையின் தேதி படி, கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

1 நரேந்திர மோடி இந்திய தலைமை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு சீனாவில் பயணம் மேற்கொள்வது எத்தனையாவது முறை?

அ முதல் முறை, ஆ 2வது முறை, இ 3வது முறை, ஈ 4வது முறை

2 மோடி தனது சீனப் பயணத்தை எந்த நகரில் இருந்து தொடங்குகிறார்?

அ பெய்ஜிங், ஆ ஷாங்ஹாய், இ சீ ஆன், ஈ குவாங் சோ

3 சீனாவுக்கு வரும் முன், சீனாவின் சமூக வலைத் தளத்தில் மோடி தனது பக்கத்தை உருவாக்கினார். இந்த சமூக வலைத் தளத்தின் பெயர் என்ன

அ வென் சின், ஆ வெய் போ, இ போ க், ஈ பேஸ்புக்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040