• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோடியின் சீனப் பயணம்
  2015-05-14 15:20:49  cri எழுத்தின் அளவு:  A A A   

கட்டுரையாளர் சக்திவேல்

எதிர்வரும் மே 14 ஆம் நாள் இந்திய தலைமையமைச்சர் நரேந்திரமோடி தனது சீன பயணத்தை சீன அதிபரின் சொந்த ஊரான சீஆன் நகரிலிருந்து தொடங்குகிறார். இந்திய பிரதமராக பதிவியேற்ற பிறகு மோடி அவர்கள் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம் இதுவாகும். இதற்கு முன் குஜராத் முதலமைச்சராக இருந்த போது முதலீட்டுகளை ஈர்ப்பதற்க்கும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்போது பிரதமராக அவர் பயணம் மேற்கொள்வது பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. இன்றைய உலக பொருளாதாரத்திலும் சரி ஆசிய நாடுகளின் வளர்ச்சியிலும் சரி சமபலம் பொருந்திய நாடுகளாக சீனாவும் இந்தியாவும் இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் தான், அதோடு இணைந்த கைகளாக சீனாவும் இந்தியாவும் செயல்பட்டால் உலக பொருளாதார வல்லரசாக வலம் வரலாம். ஆதலால் தான் மற்ற உலக நாடுகளும் மோடியின் சீன பயணத்தை உற்று நோக்குகின்றன.

இந்தியாவும் சீனாவும் பழைய வரலாற்றை மறப்பதோடு இருக்கும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொண்டால் அது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.மேலும் இரு நாடுகளின் நாகரிகங்களுக்கும் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பு உள்ளது, உலகிற்க்கு சீனா தாய்ச்சீ கலையையும் இந்தியா யோக கலையையும் கொடுத்துள்ளன. இது போன்று இரு நாடுகளும் உலகிற்க்கு கொடுத்த கொடைகள் அதிகம். இந்த பயணத்தின் போது இந்த இரு கலைகளும் பெய்ஜிங்கில் உள்ள சொர்க்க கோவிலில் இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் அரங்கேற்றப்பட உள்ளது.

சீனாவும் இந்தியாவும் இணைந்து 2015 ஆம் ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து கொண்டாடி வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் இளைஞர் குழுக்களை அனுப்பி நல்லெண்ண நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இது இரு நாடுகள் மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் நல்ல நட்புறவை வளர்த்து வருகிறது.

" சப் கா சாத், சப் கா விகாஸ்" அனைவருக்கும் ஆன வளர்ச்சியில் அனைவரும் சேர்வோம் என்று மோடி கூறுவதோடு அல்லாமல் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் அடுத்த கட்டமாக சீனா வருகிறார். இங்கு தொழில் முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளீட்ட பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் தொடக்கமாக சீனாவின் வெய்போ இணையத்தில் இணைந்துள்ளார். இதற்கு சீன மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அனைவரும் அவரது வருகையை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.

மூன்று நாள் சீன பயணத்தில் சீ ஆன், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகர்களுக்கு பயணிக்கிறார், அரசுத்தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரையும் சந்திக்க உள்ளார். வளர்ச்சிக்கு ஆன வாயில் படி என்பது அனைவரும் இணைவது தான் என்பது போல் எதிர்வரும் நாட்கள் இரு நாடுகளுக்கும் நன்மை பயப்பனவாகவும் இணைந்த கைகளாக இருகரம் உயர்த்திபிடித்து உரக்க சொல்ல வேண்டும் நாம் நண்பர்கள் எங்களது குறிக்கோள் வளர்ச்சி என்று இவையே இரு நாட்டு மக்களின் எதிர்பார்பாக உள்ளது. தொடங்கட்டும் மற்றுமொரு வெற்றி பயணம் இணைக்கட்டும் இரு நாட்டு உறவுகளையும்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040