• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குய்சோவில் சீன-இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை பூங்கா
  2015-05-28 09:23:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை பூங்காவை நிறுவ குய்சோ மாநிலத்தின் குய்ஆன் புதிய பிரதேசம் இந்திய தொழில் துறை கூட்டமைப்புடன் உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது. சீன-இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்கான கருத்தரங்கில் 27ஆம் நாள் கிடைத்த தகவல் மூலம் இது தெரிகிறது.

தகவல் மென் பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சந்தையைத் திறப்பது, இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் திட்ட வரைவுக்கான பக்குவமடைந்த கருத்து மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீன-இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை பூங்காவை உலகில் புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்ப மையமாக உருவாக்குவது முதலியவை இருதரப்பு ஒத்துழைப்புகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040