தாங்கள் வசிக்கும் பாதுகாப்பான இடங்களில்தான் பறவைகள் முட்டையிட்டு அடைகாக்கும். ஆனால், நார்வேயில் விசித்திரமான ஒரு பறவை, என்ன நினைத்த்து என்று தெரியவில்லை, ஒருவரின் வீட்டு சமையலறைக்குள் புகந்து அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த வாணலியில் முட்டையை இட்டுள்ளது.
இந்த சம்பவம் ஸ்டெயின் ஜெல்டல் என்பவரின் வீட்டில் நடந்துள்ளது. அவர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது பறவை ஒன்று இருந்த்தும், அவரைப் பார்த்தவுடன் அது பறந்த சென்ற காட்சிகள் இணையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த முட்டையை என்ன செய்வதென்று தெரியாத ஜெல்டல், அது தொடர்பான கோரிக்கையை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தார். ஒரு சிலர், முட்டையை வேகவைத்து உண்ணுமாறு நகைச்சுவையாக கூறியுள்ளனர். ஆனால், பறவை ஆர்வலர்கள் பலர் முட்டையை அடைகாத்து, அதிலிருந்து வரும் குஞ்சினை தன்னுடனே வைத்துக் கொள்ளலாலம் என்று அறிவுறுத்தியுள்ளனர். வீடு தேடி வந்த முட்டையை ஜெல்டல் என்ன செய்வார் என்று நாமும் யோசித்துக் கொண்டிருப்போம்.