• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
55 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த திருமண மோதிரம்
  2015-06-24 09:43:44  cri எழுத்தின் அளவு:  A A A   

நம்மை விட்டு தொலைந்த ஒரு பொருள் சில நாள்கள் கழித்து நமக்கு கிடைத்தால் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே, தொலைந்த திருமண மோதிரம் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்தால் அது எப்படி இருக்கும். சென்ற உயிர் மீண்டும் நம்மிடமே திரும்பி வந்து விட்டதுபோல உணர்வு ஏற்படும் அல்லவா. அத்தகைய உணர்வை பெற்றுள்ளவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா க்ளாரா பகுதியைச் சேர்ந்த ஓபிலியா கிர்கெர்.

மோதிரம் திரும்ப கிடைத்த்து குறித்து 82 வயதான ஓபிலியா கூறுகையில், இது தொலைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. மீண்டும் கிடைக்கப் பெற்றது மிகவும் சிறப்பானது. மோதிரத்தை மீண்டும் அணிவேன் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றார்.

அவரது கணவர் ராபர்ட் கிர்கெர் கூறுகையில், மோதிரம் திரும்பக் கிடைத்த்து மீண்டும் திருமணம் புரிந்த உணர்வை ஏற்படுத்தியது என்றார்.

பொதுவாக, சமைக்கும்போது, மோதிரத்தை காகித்தால் சுற்றி தனது பையில் வைப்பது ஓபிலியாவின் வழக்கம். அதுபோல, 1960ஆம் ஆண்டு வைத்திருந்தபோது, மோதிரம் எங்கேயோ கீழே விழுந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ரோமனா கிடிரெஸின் வீட்டுக்கு அருகில் விழுந்திருக்கலாம் என்று ஓபிலியா கருதினார்.

உடனே, ராபர்ட் அப்பகுதிச் சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினார். அப்போது கிடிரெஸுக்கு செய்தி தெரிய வந்தது. ஆனால், எவ்வளவு தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு கிடிரெஸின் வீட்டுப் பகுதியை சுத்தப்படுத்துவதற்காக தோண்டப்பட்டுள்ளது. கிடிரெஸின் மகள் சலாஸ் அங்கிருந்துள்ளார். அப்போது மோதிரம் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மோதிரத்தை சிறிய பெட்டிக்குள் சலாஸ் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சிறிது நாள்களுக்குப் பிறகு, அது தன்னுடைய அம்மாவின் மோதிரம் அல்ல என்று சலாஸ் உறுதி செய்துள்ளார். பிறகு அவர் அம்மாவிடம் கேட்டபோது அந்த மோதிரம் ஓபிலியாவுக்குச் சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், ஓபிலியாவின் மருமகளிடம் மோதிரத்தை சலாஸ் ஒப்படைத்துள்ளார். அவருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் ஓபிலியாவை அழைத்தபோதுதான் அனைத்து விவரமும் அவருக்கு தெரிந்துள்ளது.

மருமகளிடம் இருந்து அழைப்பு வந்தபோது நாங்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினோம் என்கிறார் ஓபிலியாவின் கணவர் ராபர்ட். வாழ்வில் நாங்கள் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளோம். ஆனால், தொலைந்த மோதிரம் கிடைத்த்து பெரும் முன்னேற்றம் என்று மகிழ்ச்சி பொங்க அவர் கூறுகிறார்.

ஒபிலியா, ராபர்ட் தம்பதி தனது குழந்தை மற்றும் பேரக் குழந்தைகளை விபத்தில் இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த சமயம், மோதிரம் கிடைத்த்து அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. வரும் டிசம்பர் திங்கள் இத்தம்பதி தங்களது 64ஆவது திருமண தினத்தைக் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பு தோண்டியுள்ளனர். அப்போது, அங்கு இந்த மோதிரம் கிடைத்துள்ளது. அதை எடுத்து மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஊழியர், அதை உரியவர்களிடம் சேர்த்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040