• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழக்கவழக்கங்களை நன்றாக கையேற்றி பரவல் செய்து வரும் மான் ஜுயே லொங் கிராமம்
  2015-06-29 16:19:58  cri எழுத்தின் அளவு:  A A A   

நீண்ட வரலாற்றில் எவ்வளவு அதிகமான பண்பாட்டுப் பழக்கங்கள் குறுகிய காலத்தில் ஒளிவீசிய பின் காணாமல் போய் விட்டன. கையேற்றப்பட முடியாத அவை மனிதருக்கு ஏற்படுத்திய உணர்வு, ஆழ்ந்த கவலைக்குரியதாகும். ஆனால், ஹாங் சோ நகரின் மேற்கு ஏரி கரையில் அமைந்துள்ள மான் ஜுயே லொங் கிராமம் சிறப்பான வழிமுறையின் மூலம் உள்ளூர் பழக்கவழக்கங்களைக் கையேற்றி பரவல் செய்து வருகிறது.

ச்செ ஜியாங் மாநிலத்தின் ஹாங் சோ மேற்கு ஏரி காட்சித்தலத்தில் அமைந்துள்ள மான் ஜுயே லொங் கிராமம், மான் ஜியா நொங் எனவும் அழைக்கப்படுகிறது. அது, நான் கௌ சிகரத்தின் தெற்கிலுள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். வூ யுயே மன்னராட்சிக் காலத்தில், இங்கே சிறு பௌத்தமத கோயில்கள் இருந்தன. மான் ஜுயே கோயில் இவற்றில் ஒன்றாகும். மான் ஜுயே என்பது, மன நிறைவு பெற்ற விழிப்புணர்வு என்று பொருள். இக்கோயிலின் காரணமாக அதே பெயரைப் பெற்ற மான் ஜுயே லொங் கிராமம், மேற்கு ஏரி லோங்ஜிங் தேயிலை மற்றும் Osmanthus fragrans மலருக்குப் புகழ்பெற்றது.

தார் சாலை, வெள்ளை சுவர், கருப்பு ஓடு, பசுமையான மரங்கள் ஆகியவை காணப்படும் மான் ஜுயே லொங் கிராமம் அமைதியாக உள்ளது. நமது செய்தியாளர் இக்கிராமத்தில் நுழைந்த போது, முதியவர் ஒருவர் தமது முற்றத்தில் புதிய லோங்ஜிங் தேயிலையை வெப்பத்தில் வறுத்துக் கொண்டிருந்தார். தாங் ஹுவாச்சோங் எனும் இந்த முதியவர் செய்தியாளரிடம் கூறியதாவது—

"இன்றுவரை லோங்ஜிங் தேயிலை, சிறு அளவு விவசாயப் பொருளாதாரத்தில் பங்கெடுத்துள்ளது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்குப் பின், குடும்ப ஒப்பந்த முறையில் இது சேர்க்கப்பட்டது. மேற்கு ஏரி காட்சித்தலத்தில் வளரும் லோங்ஜிங் தேயிலையை கட்டுப்பாட்டின்றி பறித்திட முடியாது. 1990ஆம் ஆண்டுகாலத்தில் சீன அரசவை மேற்கு ஏரி லோங்ஜிங் தேயிலையைப் பாதுகாக்கும் ஆவணத்தை சிறப்பாக வெளியிட்டது. இதனால் லோங்ஜிங் தேயிலை பயிராகும் பகுதி பாதிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

மேற்கு ஏரி லோங்ஜிங் தேயிலை, மேற்கு ஏரிக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் வளர்கிறது. மான் ஜுயே லோங் கிராமம், இந்த லோங்ஜிங் தேயிலையின் உற்பத்தி இடங்களில் ஒன்றாகும். இங்குள்ள தேயிலை விவசாயிகள், இறந்தோர் நினைவு நாளுக்கு முன் பறிக்கப்பட்ட வசந்த தேயிலையை மட்டுமே தயாரிக்கின்றனர். இத்தகைய தேயிலையின் விளைச்சல் மிக குறைவு. சுமார் 667 சதுர மீட்டர் நிலப்பரப்பில் 10 கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்படும்.

குழந்தை பருவத்திலிருந்து தாயுடன் சேர்ந்து தேயிலையைப் பறித்த தாங் ஹுவாசோங், படிப்படியாகத் தேயிலையைப் வறுத்துத் தயாரிக்கும் நடைமுறைகளில் பங்கெடுத்து, தேயிலை விவசாயியாக இருக்கிறார். தற்போது அவரது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக தேயிலை மாறியுள்ளது. அவரது தேயிலை தோட்டத்தில் மேசை மற்றும் இருக்கைகள் உள்ளன. தேநீர் குடிக்கும் போது இயற்கை காட்சிகளைக் கண்டு மகிழலாம். தேயிலை பயிரிடுதல், பறித்தல், காயவைத்தல், உருட்டுதல், வறுத்தல் உள்ளிட்ட தயாரிப்பு நுட்பங்களும், தேநீர் சுவை பார்த்தலிலிருந்து அறிந்து கொண்ட வாழ்க்கைக்கான மனநிலையும் இங்கே தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட்டு வருகின்றன.

லோங்ஜிங் தேயிலையை விட, மான் ஜுயே லோங் கிராமத்தில் வளரும் Osmanthus fragrans மலர் மேலும் புகழ்பெற்றது.

"மான் ஜுயே லோங் கிராமத்தில் Osmanthus fragrans மலர் மண்டபம் உள்ளது. மிங் வம்சத்தின் இறுதி முதல் சிங் வம்சத்தின் தொடக்கத்தில் அது புகழ்பெற்றது. எனது தாத்தா மற்றும் தந்தை வாழும் காலத்தில், Osmanthus fragrans மலர் பூக்கும் பருவம் வந்த போதெல்லாம், கிராமவாசிகள் அனைவரும் இங்கே வருவர். அதிகாரிகளும் பிரமுகர்களும் வருவர்" என்று தாங் ஹுவாசோங் கூறினார்.

மான் ஜுயே லோங், Osmanthus fragrans மலர்களைக் கண்டு மகிழுவதற்கு தலைசிறந்த இடமாகும். நிலா விழாவிற்கு முன்னும் பின்னும் இம்மலர்களின் நறுமணம் வீசுகிறது. மேலும், Osmanthus fragrans மலரால் தயாரிக்கப்பட்ட இனிப்பு உள்ளிட்ட சிறப்பான உணவு வகைகளைச் சுவை பார்க்கலாம். மான் ஜுயே லோங் கிராமத்தில் மொத்தம் 7000க்கும் அதிகமான Osmanthus fragrans மரங்கள் வளர்கின்றன. மிக பழைய மரம் 200 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்துள்ளது. இலையுதிர் காலத்தில் Osmanthus fragrans மலர்கள் பூக்கும் போது சாலைப் பக்கங்களில் கிராமவாசிகள் நிறுவிய தற்காலிக தேநீரகங்கள் காணப்படுகின்றன. மிங் வம்சம் முதல் இன்று வரையான நூற்றுக்கணக்கான ஆண்டுகளில், பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் Osmanthus fragrans மலர்களைக் கண்டு மகிழும் பழக்கம் இன்றும், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தற்போது, மேற்கு ஏரி Osmanthus fragrans மலர் விழா ஆண்டுதோறும் இங்கே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பண்பாட்டு வளத்தை வாய்ப்பாகக் கொண்டு, பொருளாதாரப் பயன் காணப்படலாம். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற ஹாங் சோவின் Osmanthus fragrans மலர், உள்ளூர் மக்களுக்கு பெரும் தொகை வருமானத்தைக் கொண்டு வந்துள்ளது.

தேயிலை, Osmanthus fragrans மலர், மேற்கு ஏரியின் அழகான காட்சி ஆகியவற்றின் காரணமாக, சொந்த வீட்டைப் பயன்படுத்திச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குமிடம் வழங்கும் குடும்ப விடுதி, இங்குள்ள புதிய தொழிலாக வளர்ந்து வருகிறது. மாசு படர்ந்த புகைமூட்டம் சீனாவின் சில நகரங்களில் ஏற்பட்டதுடன், சுற்றுச்சூழல் மற்றும் காற்று தரம் நன்றாக உள்ள கிராமப்புறத்தில் பயணம் மேற்கொள்வது நகரவாசிகளின் புதிய தெரிவாகும். சிறந்த சுற்றுச்சூழலில் அமைந்து காற்று தரமிக்க மான் ஜுயே லொங் கிராமம், சுற்றுப்புற நகரவாசிகளின் விடுமுறை போக்கிடமாக மாறியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையால், இக்கிராமத்தில் குடும்ப விடுதி துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. பயணி செல்வி சௌ செய்தியாளரிடம் கூறியதாவது—

"இங்குள்ள காற்று தரமிக்கது. மேற்கு ஏரி காட்சித்தலத்தில் அமைந்துள்ள இங்கே எழில்மிக்க காட்சிகளை எளிதில் கண்டு களிக்கலாம். நாம் தங்கியிருக்கும் குடும்ப விடுதியில் சிறிய பூங்கா உள்ளது. அங்கே தேநீர் அருந்தி மேற்கு ஏரியைப் பார்வையிடுவதில் மகிழ்ச்சி அடையலாம்" என்று அவர் கூறினார்.

குடும்ப விடுதியின் வளர்ச்சி, மான் ஜுயே லொங் கிராமம் பயணிகளை உபசரிக்கும் திறனை உயர்த்தி வருகிறது. இதன் விளைவாக, அதிகமான மக்கள் இங்குள்ள அமைதியான சூழலில் தேநீர் அருந்தி மலர்களைக் கண்டு களித்திட, இக்கிராமத்தில் பயணித்து பழக்கவழக்கங்களை நேரில் உணர்ந்து கொள்ளலாம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040