• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யீ வு நகரில் மின்னணு வணிக அலுவலில் ஈடுபடும் இளைஞர்கள்
  2015-06-29 16:19:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ச்சே சியாங் மாநிலத்தின் யீ வு நகரின் சிங் யன் லியு கிராமம், "சீனாவில் இணையக் கடைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் ஊர்" என போற்றப்படுகின்றது. இக்கிராமத்தில் அதிகமான இளைஞர்கள் வெற்றிகரமாக தொழில் நடத்துவது குறித்த கதைகள் பரவி வருகின்றன. இந்த சிறப்புமிக்க கதைகளின் பின்னணியில், கிராமவாசிகள் செல்வமடைவதற்கு உரிய வகையில் ஊக்கமளிப்பதில் இந்த இளைஞர்களின் சிந்தனை மற்றும் பேரூக்கம், மக்களின் மனங்களை உருகச் செய்துள்ளன.

பாரம்பரிய வேளாண் பொருளான கறுப்பு சர்க்கரை, யீ வு நகரின் தனிச்சிறப்பு மிக்கப் பொருட்களில் ஒன்றாகும். யீ வு கறுப்பு சர்க்கரை, பழைய முறையில் கையால் பதனீடு செய்யப்படுகிறது. இது தற்பொழுது தனிச்சிறப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது. தற்காலத்தில், பட்டறை உற்பத்தி முறை இன்னமும் நிலவிய போதிலும், தொழில் நுட்பம் மற்றும் சாதனங்களின் புத்தாக்கத்துடன், இணைய சிந்தனையை உள்ளடக்கிய விற்பனை முறையுடன் இணைந்து, யீ வு கறுப்பு சர்க்கரை உற்பத்தி தொழில், புத்துயிர் பெற்றுள்ளது. சிங் யன் லியு கிராமத்தைச் சேர்ந்த ஜீன் வன் ஜீன் என்பவர், யீ வு தொழிற்துறை மற்றும் வணிகக் கல்லூரியின் தொழில் பண்ணையில் தொழில் நடத்தியுள்ளார். அவர் இணையக் கடை ஒன்றைத் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

"இணையக் காலத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது, சிந்திக்கத்தக்கது. ஏனெனில், யூ வு கறுப்பு சர்க்கரை மிகவும் புகழ் பெற்றது. ஊற்று மூலத்திலிருந்து கறுப்பு சர்க்கரையின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். மகளிர்களே, கறுப்பு சர்க்கரையை வாங்கக்கூடிய இலக்கு குழுவினர் என கருதுகின்றோம். எனவே, அதன் அடிப்படையில் வேளாண் பொருட்களின் இணைப்பு மதிப்பை எவ்வாறு உயர்த்துவது என்பதைக் கருத்தில் கொண்டுள்ளோம்" என்றார் அவர்.

கறுப்பு சர்க்கரை போன்ற வேளாண் பொருட்களைப் பொறுத்த வரை, இணைய விற்பனை முறையைச் சார்ந்திருந்தாலும், நுகர்வைத் தூண்டி, உற்பத்தி அளவை அதிகரித்து, மூலப் பொருட்கள் மற்றும் பூர்வாங்க பதனீட்டின் விலையை நியாயமான நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று ஜீன் வென் ஜீன் கருத்து தெரிவித்தார். தொழில் சின்னத்தை நிலைநாட்டுவதன் மூலம், உற்பத்திப் பொருளின் இணைப்பு மதிப்பை உயர்த்தும் அதே வேளையில், மின்னணு வணிக அலுவல் மேடையில் விற்பனை செய்வது, பெரிய ரக மின்னணு வணிக அலுவல் நிறுவனங்களுக்கு பொருட்களை வினியோகிப்பது ஆகியவற்றைச் சார்ந்திருந்து, உற்பத்திப் பொருட்களின் விற்பனை அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ஆனால் இவை இந்த இளைஞரின் முழு சிந்தனைகள் அல்ல. ஜீன் வென் ஜீன் கூறியதாவது:

"வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிக அலுவல் பற்றி குறிப்பிடுகின்றோம். உண்மையில், வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிக அலுவல் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும்" என்றார் அவர்.

ஜீன் வென் ஜீனின் தொழில் நிறுவனம் வளர்ச்சி மிக்க ஒன்றாகத் திகழ்கின்றது. இது தவிர, இத்தொழிலின் ஊற்றுமூலமாக இருக்கின்ற கிராமவாசிகளை, இணையக் காலம் தந்துள்ள நன்மையை அனுபவிக்கச் செய்வது என்பது, ஜீன் வென் ஜீனின் மிக பெரிய பெருமையாகும். அவர் கூறியதாவது:

"நான் தொழில் நடத்தத் தொடங்கிய துவக்கத்தில், யீ வுவில் கறுப்பு சர்க்கரையின் விலை, ஒரு கிலோகிராம் சுமார் 12 யுவான் மட்டுமே. கடந்த ஆண்டின் இறுதியில், மைய உற்பத்தி இடங்களில், கறுப்பு சர்க்கரையின் விலை, ஒரு கிலோகிராம் சுமார் 30 யுவானாக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், கறுப்பு சர்க்கரை மிகவும் பற்றாக்குறைவு. விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது" என்றார்.

தாவ் கே பின் அம்மையார், கிராமவாசிகள் செல்வமடைவதற்கு ஊக்கமளிப்பவர்களில் ஒருவர் ஆவார். அவர் வீட்டுக்குரிய பொருட்கள் கடை ஒன்றை திறந்து வைத்துள்ளார். இக்கடையில் பின்னல் பொருட்கள் முக்கியமாக விற்கப்படுகின்றன.

அவர் கூட்டு நிறுவனத்தின் உற்பத்தி மார்க்கத்தை, சொந்த ஊரின் பெண்களுக்கு வழங்கினார். ஓய்வு நேரத்தில் இப்பெண்கள் தங்களது வீட்டில் பின்னல் வேலையில் ஈடுபட்டு, பணம் சம்பாதிக்க முடியும். இதனால் அவர்கள் தத்தமது கணவருடன் இணைந்து நகரில் வேலை செய்ய தேவையில்லை. இது குறித்து தாவ் கே பின் அம்மையார் கூறியதாவது:

"நான் கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்தேன். அப்போது எனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. என் கூட்டு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு கிராமத்தில் தங்கியிருக்கும் அதிக குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது, எனது மிக பெரிய விருப்பமாகும். இந்த வழிமுறை மூலம், ஒரு புறம் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். மறு புறம், கிராமத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கும் உதவி அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார் அவர்.

வறிய பிரதேசங்கள் மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் நான்கு குழந்தைகள் கல்வி பயில்வதற்கு உரிய நிதியுதவியை அவர் அளித்துள்ளார்.

தனது கூட்டு நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், மேலதிக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதும், தாவ் கே பினின் விருப்பமாகும். அவரது கூட்டு நிறுவனத்தின் அலுவல் முறை மூலம், விரைவான இணைய சிந்தனையும் நீண்டக்கால வரலாறுடைய பாரம்பரிய ஒழுக்க நெறியும் நன்றாக ஒன்றிணைந்துள்ளதையும், கோலாகலமான வணிக சூழலும், ஆழ்ந்த அன்பும் இணைந்துள்ளதையும் மக்கள் உணர்ந்து கொள்ளலாம். செல்வமடைவதில் கிராமவாசிகளுக்கு உதவி செய்வது என்பது, சமூகத்துக்கு பங்காற்றும் கடமைகளுள் ஒரு வகையாகும். இதனால் யீ வு நகர், இங்கே வருகின்ற மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040