• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுவாங்ஜிங் கிராமம்
  2015-06-29 16:20:01  cri எழுத்தின் அளவு:  A A A   

சுவாங்ஜிங் கிராமத்தில் காட்சி

கோடைக்காலத்தில் சுவாங்ஜிங் கிராமம் ஈர்ப்பாற்றல் மிக்க காட்சியை மக்களுக்கு அளிக்கின்றது. கிழக்குச் சீனாவின் ச்சியாங் சூ மாநிலத்தின் ச்சியாங்யின் நகரில் சுவாங்ஜிங் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் சிறிய ஆறுகள் இருப்பது தனிச்சிறப்புமிக்கது. கடந்த சில ஆண்டுகளாக, திராட்சை, பேரி, பீச் முதலிய பழங்களையும், நீர்வாழ் உயரினங்களையும் வளர்ப்பதில் விவசாயிகள் இங்கே சிறப்பாக ஈடுபட்டு, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளனர். நவீன வேளாண் துறையின் வளர்ச்சியுடன் விவசாயிகளின் வருமானமும் பெரிதும் அதிகரித்துள்ளது என்று சுவாங்ஜிங் கிராமத்தின் தலைவர் ட்சேன் கோயாவ் தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு முதல் இக்கிராமவாசிகள் திராட்சை பழத்தை பயிரடத் தொடங்கி, இதுவரை குறிப்பிட்ட அளவை அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

எங்கள் கிராமத்தில் 670 ஹேக்டர் பரப்பில் திராட்சை வளர்க்கப்படுகிறது. 600க்கும் அதிகமான குடும்பங்கள் இதில் பங்கெடுத்து வருகின்றன. திராட்சைப் பழ வளர்ப்பின் மூலம் அதிக மக்கள் பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

சுவாங்ஜிங் கிராமத்தில் நீர் தரம் சிறப்பாக உள்ளது. ஆகவே, இக்கிராமத்தில் விளைந்த திராட்சை பழங்கள் மிகவும் சுவையாக இருக்கின்றன. சந்தையில் மிகவும் சிறப்பாக வரவேற்கப்படுகிறன. 2007ஆம் ஆண்டு இக்கிராமத்தில் விளைந்த திராட்சை பழம், சீன மாசற்ற உணவுப் பொருள் வளர்ச்சி மையத்தால் பச்சை உணவுப் பொருளாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வோர் ஆண்டின் விளைச்சல் காலத்திலும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வணிகர்கள் சுவாங்ஜிங் கிராமத்துக்கு வருகின்றனர். திராட்சை பழ விளைச்சல் ஆண்டுதோறும் சுவாங்ஜிங் கிராமவாசிகளுக்கு சுமார் 5 கோடி யுவான் வருமானம் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூ சிங்மே என்ற விவசாயி மூன்றளவுடைய ஒரு புதிய வகை பயிரிடுதல் வழிமுறையில் ஈடுபடுகின்றார். அவர் கூறியதாவது,

இவ்வாண்டு கிவி பழத்தை புதிதாக பயிரிடத் தொடங்கினேன். ச்சியாங் சூ மாநில அரசு பரப்புரை செய்த புதிய பயிரிடுதல் வழிமுறையில் ஈடுபடுகின்றேன். அதாவது, திராட்சை பழப் பகுதியின் கீழ் கிவி பழத்தை பயிரிடுகின்றேன். அதற்குக் கீழ் செம்புற்றுப் பழத்தை வளர்க்கின்றேன் என்றார் அவர்.

இத்தகைய பயிரிடுதல் வழிமுறை நலத்தின் பயன்பாட்டு பயனை அதிகமாக உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் மே திங்கள் முதல் அக்டோபர் வரை, பல்வகை பழங்கள் முறையே பக்குவம் அடைந்து வருகின்றன. விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைக் கொண்டு வருகிறன.

சுவாங்ஜிங் கிராமத்தில் நீர் உயிரின வாழ்க்கை பூங்கா சிறப்பாக உள்ளது. இக்கிராமத்தின் தலைவர் சியேன் கொயாவ் கூறியதாவது,

2006ஆம் ஆண்டு நீர் உயிரின வாழ்க்கை பூங்காவைக் கட்டியமைத்துள்ளோம். 16 தொழில் நிறுவங்கள் இத்திட்டப்பணியில் ஈடுபட்டு மொத்தமாக 12 கோடி யுவான் முதலீடு செய்துள்ளனர். சுற்றுப் பயணத்தைத் தவிர, இப்பூங்காவில் நீர் வாழ்வனங்களையும் வளர்க்கின்றோம். எமது கிராமம் இத்துறையில் மேம்பாட்டுடையது என்று அவர் மகிழ்ச்சியாக கூறினார்.

இந்த நீர் உயிரின வாழ்க்கை பூங்காவின் பரப்பு 167 ஹேக்டராகும். நீர் வாழ் தாவரங்கள் பகுதி, நீர் வாழ்வனப் பகுதி, பழ வளர்ப்புப் பகுதி, மலர் வளர்ப்புப் பகுதி, காடு மற்றும் சதுப்பு நிலப் பகுதி, சுற்றுலாச் சேவைப் பகுதி ஆகிய 6 பகுதிகள் இதில் உள்ளன.

டிராகன் கப்பல் விளையாட்டுக்கான பயிற்சித் தளம், தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் மையம், கோல்பு தளம், தேநீர் அகம் முதலிய பல சுவையான சுற்றுலா நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொண்டு மகிழலாம்.

ஒவ்வோர் ஆண்டும் டிராகன் கப்பல் விழாவின் போது, சுவாங்ஜிங் கிராமத்தில் நடத்தப்படும் கப்பல் போட்டி மிக அதிக பயணிகளை ஈர்க்கின்றது. வாழ்க்கை தரம் மேம்பாட்டுடன் சுவாங்ஜிங் கிராமவாசிகள் சொந்த ஊரை மேலும் நேசிக்கின்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040