• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யீ வூ நகர் புத்தாக்க நகராகும்
  2015-06-29 16:19:50  cri எழுத்தின் அளவு:  A A A   

பொது மக்கள் தொழில் நடத்துதல், புத்தாக்கம் என்ற கால ஓட்டத்தில் யீ வூ நகரிலுள்ள ச்சிங்யான்லியு ஊரில் புத்தாக்க இயற்கைச் சூழல், புதிய மாதிரியாக காணப்பட்டுள்ளது. ஊரிலுள்ள மிக குறிப்பிடத்தக்க இடத்தில் அமைந்த யீ வூ தொழில் மற்றும் வணிகக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்களின் தொழில் பண்ணை மிக சிறந்த மாதிரியாகும். கல்வியும் நடைமுறையும், இக்கல்லூரியில் பயில்கின்ற மாணவர்களின் தொழில் திறனை ஒன்றிணைந்துள்ளன.

1994ஆம் ஆண்டில் பிறந்த யாங் துங் பாவ், யீ வூ தொழில் மற்றும் வணிகக் கல்லூரியில் மூன்றாவது வகுப்பில் பயில்கின்ற மாணவர் ஆவார். மேலும், அவர், புகழ்பெற்ற மாணவர் தொழில் முனைவோரும் ஆவார். இவருடைய கூட்டு நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு, 60 இலட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. இவரது நிறுவனத்தில் 8 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழில் பயன்பாட்டிற்காக 3 வாகனங்களும் இருக்கின்றன.

Zhe jiang மாநிலத்திலுள்ள யுயாவ் நகரிலிருந்து வந்த யாங் துங் பாவ், அவரது பெற்றோர் தொழிலாளர்கள் ஆவர். பல ஆண்டுகளுக்கு முன், அவர் களது வீடு எதிர்பாராத தீ விபத்தினால் நாசமாகியுள்ளது. அவரது குடும்பப் பொருளாதார நெடுக்கடி நிலைமையில் சிக்கியதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் நுழைந்த பிறகு, அவர், ஒரு இணைய வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டியெல்ளார். ஆனால், உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அந்த வணிகக் கூட்டு நிறுவனத்திலிருந்து விலகி, தானே புத்தாக்கத்தைத் துவக்கினார். தற்போது, இணைய வர்த்தகத்தின் வழியாக மகபேறு பெற்ற பெண்மனிகள் மற்றும் சிசுகளுக்குத் தேவைப்படும் பொருட்களையும் குழந்தை கல்விக்கான பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றார்.

2014ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் 11ஆம் நாள், தொழில் பண்ணையில் சரக்கு போக்குவரத்து தேக்கப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 50 ஆயிரம் யுவானைக் கொண்டு, பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களுக்கு உதவியளித்துள்ளார். யாங் துங் பாவ், பல்கலைக்கழகப் பட்டம் பெறாத மாணவராவார் இருந்தாலும், அவர் பல்கலைக்கழகத்தின் முதலாவது வகுப்பில் ஆசிரியாராக மாணவர்களுக்குச் சேவை புரிகின்றார். அவர், பிற மாணவர்களுடன் தொடர்புடைய தகவல்களையும் அனுபவங்களையும் முழுமையாகப் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் கூறியதாவது

பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால், அவர்களுக்கு எனது உதவி தேவைப்படுகின்றது. உதவிகளைத் தேவைப்படும் போது, உங்கள் உதவிகள் முக்கியமானவை. எதிர்காலத்தில், அவர்கள் உங்களுக்கு மிகவும் நன்றியறிதலுடன் இருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, பணம், எண்ணிக்கை மட்டும் தான். அழைப்பின் பேரில் மேனிலை பள்ளியில் ஆசிரியாராகப் பதவி ஏற்றேன். இச்சமூகத்தையும் பள்ளியையும் பொறுத்தவரை, சுய நலமின்றி தம்மை அர்ப்பணிப்பதென்பது மிக முக்கியக்குதவை. நான் இளைஞர் இவ்வாண்டு, எனக்கு 22 வயதாகிறது. முழுமையான பணம் சம்பாதிக்க முடியாது என்று யாங் துங் பாவ் கூறினார்.

புத்தாக்கத்தில் பங்கெடுக்கும் மாணவர்கள், ஆசிரியர்களாகப் பதவி ஏற்கின்றனர். ஆசிரியர் உரிமையாளராக மாறி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இதனால் மாணவர்கள் மாதிரி ஈர்ப்பு ஆற்றலையும் வெற்றி உணர்வையும் உணர்ந்து கொள்ளலாம். இப்புத்தாக்கக் கல்வி பற்றி யீ வூ தொழில் மற்றும் வணிகக் கல்லூரியின் துணை வேந்தர் ஜியா ஷாவ் ஹுவாவின் புகழ்பெற்ற கருத்து முக்கியமானது. அவர் மேலும் கூறியதாவது

முதலில், நீங்கள் உரிமையாளராக மாறுகின்றீர்கள்ள்டுன்னர். தகுதி வாய்ந்த ஆசிரியராகின்றீர்கள். எனவே, எல்லா பிரச்சினைகளும், பிணக்குக்குரிய பிரச்சினைகளாகும். இச்சமூகத்துக்கும் இக்காலத்துக்கும் நான் நன்றியுடையவன். இத்தகைய கருத்து மீது சகிப்பு மேற்கொண்டது என்று அவர் கூறினார்.

இக்கல்லூரியின் துணை வேந்தர் ஜியா ஷாவ் ஹுவா, மாணவர் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் மாறுவதற்குரிய ஊக்கத்தை அளித்துள்ளார்.

யீ வூ நகரின் துணைத் தலைவர் ஷியுங் டாவ்,  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது

யீ வூ நகர், நீண்டகாலமாக, புத்தாக்கத்தை உருவாக்குவோரின் சொர்க்கமாகும். சீனத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங், சீனாவின் இணையக் கடையின் முதலாவது கிராம என்ன எங்கள்ப் பெயர் சூட்டினார். ஹை நன் மாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் என்மை நிலையிலிருந்து ஒரு கோடி யுவானை சம்பாதித்த கூட்டு நிறுவனத்தின் உரிமையாளராக மாறியுள்ளார். தொழில் மற்றும் வணிகக் கல்லூரியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் குழு, இணையத்தில் புத்தாக்கத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. வெளிநாட்டவர் சீனாவில் சுறுச்சுறுப்பாக வேலை செய்து செல்வம் சேர்க்கின்றனர். சீனப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு குழுந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த மாதிரி இணக்கமானக் கதைகளைச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் பாராட்டினார். யீ வூ நகர், பொது மக்கள் தொழில் நடத்தி, பொது மக்கள் புத்தாக்கம் நடத்தும் நகராகும் என்று சீனத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங் கூறினார்.

யீ வூ நகரின் அரசு, சீரான புத்தாக்கச் சூழலை உருவாக்க நீண்டகாலமாகப் பாடுபட்டு வருகின்றது. இவ்வாண்டின் துவக்கத்தில், யீ வூ நகரின் அரசு திட்டவட்டமான கொள்கையை வெளியிட்டது. புத்தாக்கத்தை உருவாக்குவோருக்கு சலுகையுடன் கூடிய வரி வருமானத்தையும் நிதி மானியத்தையும் நிதி உதவிகளையும் பெரும் அளவில் வழங்கியுள்ளது. நாடு முழுவதிலிருந்தும் உலகிலிருந்தும் வரும் புத்தாக்கத்தை உருவாக்குவோரை யீ வூ நகர் வரவேற்கின்றது. அவர்களுக்கு இந்நகர் மிக சிறந்த சேவைகளை வழங்கும். அவர்களது கனவுகளை நனவாக்க உதவியளிக்கும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040