• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பண்டைய லுங்மென் கிராமத்தில் செழப்பான வாழ்வு
  2015-06-29 16:19:18  cri எழுத்தின் அளவு:  A A A   

லுங்மென் கிராமத்தில் தங்கும் போது, கிராம நுழைவாயிலுள்ள ஓடையின் நீரோட்ட ஒலி மற்றும் பறவையின் சங்கீதத்துடன் காலையில் விழிக்கலாம். சாலைகளில் படர்ந்திருந்த மூடுபனியை சூரிய கதிர்கள் சுட்டெறித்து கிராமத்திலுள்ள பண்டைய சாலையில் வெளிச்சத்தை நிரப்பியது. பூனைகளும் நாய்களும் வீட்டுத் தெருக்காளில் ஓடி விளையாடுகின்றன. பாட்டிகள் அன்றைய முதலாவது தொகுதி இட்லிகளைப் போன்ற உணவு வகையைச் சமைப்பதற்குத் தயாராகினர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகின்றனர். இந்தக்காட்சி, பெரிய நகரங்களில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை கனவைப் போன்றது. ஆனால், புஃயாங் லுங் மென் கிராமத்தில் சாதாரண நாளின் துவக்கம் இப்படித்தானிருக்கும்.

லுங் மென் கிராமம், சீனாவின் கிழக்கு பகுகியிலுள்ள ச்சேச்சியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரத்துக்குத் தென்மேற்கில் அமைந்துள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் லுங் மென் கிராமத்தில் மிங் மற்றும் சிங் வம்சகாலத்தின் கட்டிட்ட கலைகளையும் பண்டைய வீதிகளையும் கண்டுரசிக்கலாம்.

பயணியர் திரு.ஹு காலை உணவு சாப்பாட்டுக்குப் பிறகு கிராமத்தின் வீதியில் குடும்பத்தினருடன் உலாவியபோது செய்தியாளரைச் சந்தித்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் குடும்பத்தினருடன் இணைந்து வாகனத்தின் மூலம், நகர சுற்றுப்புறங்கள் அல்லது அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன் என்று திரு.ஹு செய்தியாளரிடம் தெரிவித்தார். லுங் மென் கிராமம், சிறியதாக உள்ளது. முழுமையாக வணிகமயமாக்கம் அடையவில்லை. உள்ளூர் மக்களின் வீடுகளில் தங்குவது, நட்சத்திர உணவு விடுதிகளை விட தலைசிறந்தது இல்லை எனும போதிலும், அம்மக்களின் வாழ்வை அனுபவிக்கலாம். பண்டைய கிராமத்தில் உலாவி, கிராமவாசிகளுடன் நிறைய பேசி, அரிசி மதுக் குடிக்கலாம். இப்பொழுது தாம் ஒரு பயணியர் என்பதை மறந்து விட்டேர் என்றார் திரு.ஹு. அவர் மேலும் கூறியதாவது:

சுற்றுப்புறங்களுக்குச் சென்றுள்ளோம். இந்தப் பண்டைய கிராமம் சிறப்பானது. சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது. இங்குள்ள பழைய கட்டிடங்கள் மிகவும் கலைநயமானவை. அதேவேளை கிராமம் மிக அமைதியாக உள்ளது என்றார்.

லுங் மென் கிராமம், சீனாவின் நூற்று நாட்டுப்புறப் பண்பாட்டுக் கிராம மாதிரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 3 அரச வம்சக்காலத்தின் வூ நாட்டின் பேரரசர் சுன் சியுவானின் எதிர்கால தலைமுறைகள் இங்கு குழுமி வாழ்கின்றனர். இதனால், கிராமத்திலே, உள்ளூர் தனிச்சிறப்பியல்பு கொண்ட பாரம்பரிய நாட்டுப்புற வழக்கங்கள், கூட்டுக் குடும்ப பண்பாடு ஆகியவை செவ்வனே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுன் குடும்பக் கோயிலை மையமாகக் கொண்டு, கிராம வீதிகள் சுற்றுப்புறத்துக்கு விரிந்து, அனைத்து வீடுகளையும் இணைக்கின்றன.

2004ஆம் ஆண்டு தொடங்கி, உள்ளூர் அரசாங்கம், 15 கோடி யுவானை ஒடுக்கீடு செய்து, பண்டைய லுங்மென் கிராமத்தில் பராமரிப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. புதிய கிராம கட்டுமானத்தோடு, சுற்றுச்சூழல் சீராக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. லுங் மென் வட்டத்தின் துணைத் தலைவர் செங் ச்சி சியுன் பேசுகையில், பண்டைகாலம் தொட்டி, லுங்மென் வட்டத்துக்கு முன் ஆறு ஓடுகிறது. மறுப்பக்கத்தில் மலை உள்ளது. நிலவியல் மேம்பாட்டுடன், இந்த வட்டம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால், பண்டைய கிராம மலர்ச்சி திட்டப்பணியை மேற்கொள்ளும்போது, பாதுகா்பபு என்பது முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று அறிமுகப்படுத்தினார். செங் ச்சி சியுன் மேலும் கூறியதாவது:

இந்த கிராமத்தில் வணிக சூழ்நிலை மிகக் குறைவு. கிராமவாசிகளின் கருத்து இன்னும் பாரம்பரியமானது. வணிக சூழ்நிலையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. லுங்மென் மக்கள் உற்சாகமாக விருந்தோம்பல் செய்கின்றனர். இயற்கையின் சூழலும் உள்ளூர் நாட்டுப்புற பழக்கங்களும் பூர்வீக நிலைமையை நிலைநிறுத்தி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

சீரான பாதுகாப்பு நடவடிக்கைகளால் பண்டைய லுங்மென் கிராமத்திற்குள்ளே அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகால வரலாறுடைய பண்பாட்டுடன், ஆண்டுதோறும் லுங் மென் நாட்டுப்புற பழக்க விழா இதில் நடைபெறுகிறது. உற்சாகமாக இருக்கும் லுங்மென் மக்களின் தனிச்சிறப்பான நாட்டுப்புற பழக்க அரங்கேற்றம், சுவையான உணவுகள், எழில் மிக்க பாரம்பரிய பண்பாட்டுக் காட்சி முதலியவை, பண்டைய கிராமத்தின் பாணியை எடுத்துக்காட்டுகின்றன. இக்கிராமத்தில் பார்க்கப்பட்ட அனைத்து பொருட்களிலும் உள்ளூர் மக்களின் சொந்த ஊர் மீதான அன்பைக் காணலாம்.

வீதியில் நிறைந்திருந்த சுவையான நறுமணத்தைக் கடந்து, எமது செய்தியாளர் கிராமவாசி சுன் சே கோவின் வீட்டுக்குச் சென்றார். அவர் லுங் மென்னில் பிறந்து வளர்ந்தவர். இப்போது சுன் சியுவான் குடும்ப விருந்து உணவகத்தை இயங்கி வருகிறார். விருந்தினர்களும் பயணிகளும் தமது உணவகத்தில் மிகவும் சிறப்பான உள்ளூர் வறுவல்களை சுவைக்கலாம் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். சுன் சியுன் குடும்ப உணவுகளைச் சமைப்பது பற்றி அவர் பேசியதாவது:

இந்த வறுவல்கள், லுங் மென்னின் தனிச்சிறப்பியல்புகளின் படி சமைக்கப்பட்டன. மாநகரங்களை விட, நாங்கள் சமைத்த உணவு வறுவல் வகை வேறுப்பட்டது. இதை சுவைக்கும் போது, குழந்தை பருவத்தின் நினைவுகளை உணர்ந்துக்கொள்லாம். இப்பொழுது மக்களின் வாழ்வு மென்மேலும் நன்றாக மாறியுள்ளது. பணம் நீட்டிய பிறகு வெளி உலகம் சென்று சுற்றிப்பார்க்க விரும்புகின்றனர். என்னுடைய உணவகத்துக்கு வந்து உணவுகளை சுவைக்கும் பயணிகளில் சீனர்களும் வெளிநாட்டவர்களும் அடங்குவர். சில அமெரிக்கப் பயணிகள்வர் இணையதளத்தில் என்னுடைய உணவகம் பற்றிய தகவல் அறிந்துகொண்ட பிறகு இங்கு சிறப்பாக வந்தனர் என்று அவர் கூறினார்.

முன்பு, லுங் மென் கிராமத்தில் பயிர் செய்வது, சிறிய கடையை இயக்குவது, தொழிற்சாலைகளைத் திறப்பது ஆகியவை, உள்ளூர் மக்கள் வருமானம் ஈட்டுவதற்கான முக்கிய ஆதாரங்களாகும். இப்பொழுது, சுற்றுலாத் துறையின் மூலம் லுங்மென் மக்கள் புதிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். கிராம சுற்றுலா வளர்ச்சியைப் பொறுத்தவரை, கிராம வீட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குவது மேலும் சிறப்பான அனுபவம். தற்போது, லுங்மென் கிராமத்தில் தனிச்சிறப்பான கிராம வீட்டு தங்கும் விடுதிவின் எண்ணிக்கை 30ஐ தாண்டியுள்ளது. சுற்றுலா மற்றும் வணிக அளவு பெரிதும் வளர்ச்சியடைந்த மற்ற பண்டைய கிராமங்களுடன் ஒப்பிடுகையில், லுங்மென் கிராமத்தில் மக்கள் மெதுவான வாழ்வுமுறை போன்ற சிறப்பான சுற்றுலா சேவையில் ஊன்றிநிற்கின்றனர். அவர்களின் மனத்தில், விருந்தினர்களை விருந்தோம்பலாக உபசரிப்பது தான் சரியான வழிமுறையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040