• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் ஒத்துழைப்பு
  2015-07-03 17:10:56  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் தலைமையமைச்சர் டேவிட் கேமரூண், பிரிட்டனில் பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினருமான மங் ஜியன்ச்சுவை ஜூலை 2ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

தற்போது, சீன-பிரிட்டன் உறவு உயர்வேக நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகள் முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளன. பிரிட்டனுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டு, உலக அமைதி மற்றும் செழுமையைப் பேணிக்காப்பதற்குப் புதிய பங்காற்ற சீனா விரும்புவதாக மங் ஜியன்ச்சு தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, பிரிட்டன்-சீன உறவு மென்மேலும் நெருங்கி வருகிறது. சட்ட அமலாக்கப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு துறையில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த பிரிட்டன் விரும்புவதாகவும் டேவிட் கேமரூண் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040