• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உயர் வேக தொடர் வண்டி மூலம் அழகான சிங்காயில் பயணம் மேற்கொள்வோம்
  2015-07-04 20:28:33  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில் "WeChat" எனும் செய்தி தொடர்பு சேவை வழங்கும் APPயில் இரு தொகுதி படங்கள் சீனாவில் அதிகமாக பாராட்டப்பட்டு, பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், ஒரு தொகுதி படங்கள், சீனாவில் மிக பெரிய ரேப் மலர்கள் கடல் என போற்றப்படும் மன் யுன் மலர் கடலின் படங்களாகும். இன்னொரு தொகுதி படங்கள், சீனாவில் "வானக் கண்ணாடி" என போற்றப்படும் சாகா உப்பு ஏரியின் படங்களாகும். சீனாவில் இத்தகைய எழில் மிக்க இடங்கள் இருக்கின்றன என்பதை இணையம் பயன்படுத்துவோர் பலர் வியந்து, பாராட்டினர். முன்பு அதிக மக்களுக்குத் தெரியாத இவ்விரு இயற்கை காட்சிகள் மேற்கு சீனாவின் சிங் காய் மாநிலத்தில் உள்ளன.

படப் படைப்புகள் மற்றும் புதிய செய்தி ஊடகங்களின் பரப்பு திறனைச் சார்ந்திருக்காமல், பெரும்பாலோர் இத்தகைய அருமையான காட்சிகளை கண்டு ரசிக்க வாய்ப்பு இல்லை. புகைப்படப் படைப்புகளால், சாகா உப்பு ஏரி புகழ் பெற்றுள்ளது என்று சிங்காய் மாநிலத்தில் காங் குவெய் சுற்றுலா நிறுவனத்தின் கிளையின் துணை மேலாளர் துங் வெய் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சாகா உப்பு ஏரி, "வானக் கண்ணாடி" என அழைக்கப்படுகின்றது. சாகா உப்பு ஏரி, சீன மக்களால் பெரிதும் போற்றப்பட்டுள்ளதற்கு, புகைப்படங்கள் பரவியதே காரணமாகும். வானிலை நன்றாக இருக்கும் போது, வானத்தின் காட்சிகளை, ஒன்று போல் கண்டு மகிழலாம். நாள்தோறும் சில ஆயிரக்கணக்கான மக்கள் சாகா உப்பு ஏரிக்கு வருகை தருகின்றனர். தற்போது, சாகா உப்பு ஏரி, சிங்காய் மாநிலத்தில் மிக புகழ் பெற்ற சுற்றுலா இலக்கிடங்களில் ஒன்றாக மாறியுள்ளது" என்றார் அவர்.

சுற்றுலா துறையில் ஈடுபடுவதால் சிங்காய்க்கு வருகை தரும் பல புகைப்படக் கலைஞர்களுக்கு துங் வெய் சேவை புரிந்துள்ளார். அவர் சிங்காயின் அழகான இயற்கை காட்சிகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டு, புகைப்படம் பிடித்தலில் படிப்படியாக பேரார்வம் கொண்டுள்ளார். தற்போது அவர் புகைப்படப் பிடித்தல் ஆர்வலராக மாறியுள்ளார்.

ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் திங்களில், மன் யுவனின் ரேப் மலர் கடல் மிகப் பெருமிதமான காட்சியை அளிக்கின்றது. இம்மலர் கடல், வடக்கில் ச்சி லியன் மரத்திலிருந்தும், மேற்கில் யுன் அன் நகரிலிருந்தும், கிழக்கில் யு லோங் கடற்கரைக்கும், தெற்கில் தா பன் மலைக்கும் பரந்துபட்ட அளவில் பரவி காணப்படுகின்றது. இம்மலர்களால் நிலம், பொன் நிறக் கடல் போல் இருக்கின்றது. சிங்காய் மாநிலத்தின் சுற்றுலா அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர் லியு ஃபெங் கூறியதாவது:

"மன் யுவானின் மலர்க் கடல், சீனாவில் ஐந்து புகழ் பெற்ற மலர்க் கடல்களில் ஒன்றாகும். மன் யுவானின் மலர்க் கடல், மக்களுக்கு ஆர்வம் தரக்கூடியது. இது நூற்று கிலோமீட்டர் பரவி காணப்படுகின்றது. நீல வானத்தின் கீழ், பொன்னிற மலர்க் கடல் காணப்படுகின்றது. உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டு, அதிக மக்கள் இம்மலர் கடல் பற்றி அறிந்து கொண்ட பின், இவ்விடத்துக்குச் சென்று, கண்டு ரசிக்கலாம்" என்றார் அவர்.

உண்மையில், சிங்காய் மாநிலத்தில், சாகா உப்பு ஏரி, மன் யுவான் மலர்க் கடல் ஆகியவற்றைத் தவிர, புகைப் படம் பிடிக்கத்தக்க எழில் மிக்க இடங்கள் அதிகம். இவ்விடங்கள் மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றன. ஹெய்மா ஆறுக்குச் சென்று, சூரிய உதயத்தை புகைப்படம் பிடிப்பது, சிங்காய் மாநிலத்துக்கு வருவதற்கு பின் புகைப்படக் கலைஞர்கள் பலரின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும் என்று துங் வெய் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது, புகைப் படம் பிடிக்கும் ஆர்வலர்களின் பயண நேரத்தைச் சிக்கனப்படுத்தியுள்ளது. உயர் வேக இருப்புப்பாதை, சிங்காய் மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது என்று துங் வெய் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"முன்பு போக்குவரத்து வசதியாக இல்லை என்பதால், சிங்காய் மாநிலத்தில் சில இயற்கை காட்சிகளின் புகழ் குறைவு. உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட பிறகு, புகைப்படம் பிடிக்கும் ஆர்வலர்கள், குறிப்பாக வெளியூரில் அடிக்கடி பயணம் மேற்கொண்டோரைப் பொறுத்த வரை பயணம் மிகவும் வசதியாக மாறியுள்ளது" என்றார் அவர்.

பீடபூமி புகைப் படப் படைப்புகளை எடுக்க, புகைப்படக் கலைஞர்கள் பாதையில் கடினமாக செல்ல வேண்டியிருக்கின்றனர். அவர்கள் பிடிக்கும் புகைப்படங்கள் மூலம், மக்கள் நேரடியாக காண முடியாத அருமையான காட்சிகளை கண்டு ரசிக்க முடியம். புகைப்படம் பிடிக்கும் ஆர்வலர்கள் பலர் சிங்காய்க்குச் சென்றுள்ளனர்.

உண்மையில் சிறப்பு தொழில் புகைப்படக் கலைஞர்களைத் தவிர, சாதாரண மக்கள் சாதாரண புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி நல்ல புகைப்படப்படைப்புகளை பிடிக்க முடியும். சிங்காய் மாநிலத்தில் மேம்பாட்டுடைய இயற்கை காட்சிகள் இருக்கின்றன. எந்த புகைப்பட வசதியைப் பயன்படுத்தி புகைப் படம் பிடித்தாலும், படங்களில் உள்ள காட்சிகள் மக்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கக்கூடியவை ஆகும்.

இயற்கை காட்சிகள் மிகவும் அழகானவை. சிங்காய் பிரதேசத்தில் ச்சி லியன் மலை, தாங்குலா மலை, யாங் ச்சி ஆறு, மஞ்சள் ஆறு மற்றும் லன் சான் ஜியாங் ஆற்றின் ஊற்றுமூலம், சீனாவில் மிக பெரிய உப்பு ஏரியான சிங்காய் ஏரி, பரந்த புல்வெளி, கம்பீரமான மலைகள், நீல வானம், வெள்ளி மேகங்கள் ஆகியவை, இயற்கை ஓவியம் போல் தோற்றமளிக்கின்றன. சிங்காய் மாநிலத்தின் சுற்றுலா வாரியத்தின் அலுவலர்கள், பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணிகள் சிங்காய் மாநிலத்துக்கு வருவதை வரவேற்கின்றனர். அவர்களில் ஒருவர் கூறியதாவது:

"சீன வானொலி நிலையத்துக்கு நன்றி தெரிவிக்கின்றோம். தங்கள் பணிகள் மூலமோ, தங்கள் ஒலிபரப்பு மூலமோ, மேலதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எழில் மிக்க சிங்காய்க்கு வருவதை ஈர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040