• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகான சின்சியாங்கில் உயர்வேக இருப்புப்பாதையின் வளர்ச்சி
  2015-07-04 20:28:31  cri எழுத்தின் அளவு:  A A A   

சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 16 இலட்சத்து 60 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர். அதன் நில எல்லை சுமார் 5600 கிலோமீட்டர் நீளமாகும். சீனாவின் மொத்தப் பரப்பில் ஆறில் ஒரு பகுதியை வகிக்கிறது. ரஷியா, தஜீகஸ்தான், கீர்கீஸ்தான், தஜீகஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு அண்டை நாடுகளை இது ஒத்தி அமைந்துள்ளது. வரலாற்றில் பண்டைய பட்டுப்பாதையின் முக்கிய வழியாகவும் தற்போதைய பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலத்தின் மையப்பகுதியாகவும் இது உள்ளது.

உருமுச்சி, சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாகும். வெளிநாட்டுப் பாணியுடைய இந்நகரத்தில் அதிக மேம்பாலங்களும் உயரமான கட்டிட்டங்களும் உள்ளன. அகலமான பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளனர்.

உருமுச்சி நகரத்தின் பெரிய பாசா என்னும் நாட்டுப்புற வழக்க வீதி, உள்ளூர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இஸ்லாம் பாணியுடைய கட்டிடம் பயணிகளின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது. குதூகலமான மேற்கு தேசிய இனத்தின் தனிச்சிறப்பியல்புகளையும் பிரதேசப் பண்பாட்டையும் இங்கு உணர்ந்து கொள்ளலாம்.

தனிச்சிறப்பான உள்ளூர் வழக்கம் அழகான இயற்கை காட்சி ஆகியவற்றினால், எண்ணற்ற பயணிகள் ஈர்க்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கிலிருந்து வந்துள்ள பயணி லீ அம்மையார் கூறியதாவது:

சின்சியாங், பார்க்கத்தக்க இடமாக இருக்கிறது. சுவையான உணவுவகைகள், அழகான காட்சிகள் முதலியவை இங்கு உள்ளன என்று குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையின் நிலைமை பற்றி, சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் தலைவர் இநாம்.நசர்தின் அறிமுகப்படுத்திக் கூறியதாவது:

இவ்வாண்டு முதல் காலாண்டில் சுற்றுலாப் பொருளாதார நிலைமை சீராக உள்ளது. இவ்வாண்டில் மொத்தமாக 5 கோடியே 50 இலட்சம் உள்நாட்டுப் பயணிகளையும் 15 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகளையும் வரவேற்கத் திட்டமிட்டுள்ளோம். சுற்றுலா வருமானம் ஏழாயிராம் கோடி யுவானை எட்ட முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

லான்-சின் உயர்வேக தொடர்வண்டி போக்குவரத்து திறக்கப்பட்டப் பிறகு சின்சியாங்கின் சுற்றுலாத்துறை வலிமையாக வளர்ந்து வருகிறது. இநாம் மேலும் கூறியதாவது:

இவ்வாண்டு உயர்வேகத் தொடர்வண்டி உள்பிரதேசத்திலிருந்து சின்சியாங்வுக்கு சென்ற பின், ஹாமி, துருப்பான், உருமுச்சி முதலிய நகரங்களின் சுற்றுலா துறை விரைவாக வளர்ந்து வருகிறது. உயர்வேகத் தொடர்வண்டி மூலம் சின்சியாங் வந்து பயணம் மேற்கொண்டவரின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், உயர்வேக தொடர்வண்டி காஷ் மற்றும் ஈலிவுக்குச் செல்லுவதாக இருந்தால், சின்சியாங்கின் சுற்றுலாத் துறையில் முன்கண்டிராத முன்னேற்றம் ஏற்படுவது உறுதி என்று குறிப்பிட்டார்.

உயர்வேக தொடர்வண்டி போக்குவரத்து திறக்கப்படுவது, வெளியூரின் பயணிகள் சின்சியாங்கிற்கு வருவதற்கும் உள்ளூர் மக்கள் வெளியூருக்குச் செல்வதற்கும் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சின்சியாங் மக்களைப் பொறுத்தவரை, அண்டை மாநிலமான கான்சூவுக்குச் செல்வது, தொலைவான பயணத்திலிருந்து, குறுகிய பயணமாக மாறியுள்ளது. லென்சோவில் பயணத்தை முடித்து சின்சியாங்கிற்குத் திரும்பிய திரு.மா, சின்சியாங்கில் பிறந்து வளர்ந்தவர். உயர்வேக தொடர்வண்டி மூலமான அனுபவத்தை அவர் வெகுவாக பாராட்டினார்.

முன்பை விட உயர்வேக தொடர்வண்டி சிறப்பாக உள்ளது. மிக வேகமாகவுள்ளது. வசதியாக உள்ளது என்று திரு.மா கூறினார்.

வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சின்சியாங் ஆக்கப்பூர்வமாக முயற்சித்து வருகிறது. சின்சியாங்கின் சுற்றுலா மூலதளங்கள் எழில்மிக்கவை. சுற்றுலா மூலம் மேலதிகமானோர் இணக்கமான செழுமையான சின்சியாங்கை அறிந்துகொள்லலாம் என்றும் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் தலைவர் இநாம் தெரிவித்தார்.

இப்பொழுது, உருமுச்சியில் உயர்வேக தொடர்வண்டி நிலையம் கட்டியமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதன் மாமண்டபத்தின் முக்கிய பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், உருமுச்சியின் புதிய உயர்வேக தொடர்வண்டி நிலையம், முழு சின்சியாங்கின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து மையமாக மாறும். அதே வேளை, பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தின் சுற்றுலா மையத்தின் முதல் திட்டப்பணியான சின்சியாங் சுற்றுலா கட்டிடத்தின் கட்டுமானப்பணி ஏப்ரல் 30ஆம் நாள் உருமுச்சியின் உயர் புதிய தொழில் நுட்பப் பிரதேசத்தில் துவங்கியது.

சின்சியாங், பட்டுப்பாதையின் மையப்பகுதியாக மாறியுள்ளது. அதன் பயனை செவ்வனே பயன்படுத்த வேண்டும். உள்பிரதேசத்தின் 130 கோடி மக்கள் மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த 130 கோடி பேரை இணைக்கும் இவ்வளவு சிறப்பான நிலவியல் மேம்பாட்டைக் கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் சுற்றுலா துறையை வலுப்படுத்துவது, சின்சியாங்கின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மாபெரும் தூண்டு கோலாக அமையும். ஒரு இடத்தின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, மனிதர்களின் மூலவளம் மிகவும் முக்கியம். நிறைய பேர், அதிகமான நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கலாம். உள்பிரதேசத்துடனும் சுற்றிப்புறங்களுடனும் பல்நிலையிலான ஒத்துழைப்பு அமைப்பு முறையை நிறுவி மேம்படுத்தி, மூலவளத்தை கூட்டாக அனுபவித்து, சுற்றுலா துறையின் ஒத்துழைப்பையும் பரஸ்பர நலனையும் விரைவுபடுத்தி, கூட்டு வளர்ச்சியடைய வேண்டும் என்றும் இநாம் கூறினார்.

சின்சியாங்கின் தனிச்சிறப்பான மானிட பாவனைகள், அழகான இயற்கை சுற்றுச்சூழல், சுவையான உணவுகள், தனிச்சிறப்பியல்புடைய உள்ளூர் பொருட்கள் ஆகியவை, பயணிகளை ஈர்த்து வருகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040