• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லான்–சின் வழி உயர்வேக இருப்புப்பாதையின் பயன்
  2015-07-04 20:22:28  cri எழுத்தின் அளவு:  A A A   

கான் சூ மாநிலத்தின் தலைநகர் லான்சோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடையது. இந்தப் பழைய நகரம் மேற்கையும் கிழக்கையும் இணைத்து பண்டையக் காலத்தில் சீனா வெளிநாடுகளுடன் பரிமாற்றம் செய்த பொற்காலத்தைக் காண்பித்துள்ளது. பட்டுப்பாதைப் பொருளாதாரப் பாதையைக் கட்டியமைக்கும் முன்மொழிவை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் முன்வைத்துள்ளார். அதன்படி பழைய பட்டு மண்டலத்தைக் அடிப்படையில் புதிய நிலைமைக்கேற்ற பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலத்தை கட்டியமைத்து, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் பிரதேசங்களுடனும் சீனா பரிமாற்றத்தையும் தொடர்பையும் மேலும் நெருக்கமாக வலுப்படுத்தும். இக்கொள்கை பழைய லான் சோ நகரத்துக்குப் புதிய வளர்ச்சி ஆற்றலையும் கொண்டு வருவது உறுதி.

தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாகும். பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானம் லான் சோ நகரிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. லான்சோ லான்ஷ் எரியாற்றல் சாதனச் சர்வதேச பொறியியல் கூட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,

ஒரு மண்டலம் ஒரு பாதை என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டப் பிறகு, மேலதிக சந்தை பங்குகளைப் பெறும் வகையில் இத்திட்டப்பணித் தொடர்பான நாடுகளுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். துகுமேனிஸ்தான், ஈரான், கத்தார், ரஷியா ஆகிய நாடுகளில் எங்களது ஒத்துழைப்புக் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வாண்டு துகுமேனிஸ்தான், துபாய் ஆகியவற்றில் இரு புதிய கூட்டு நிறுவனங்களையும், சிங்கப்பூர், அல்ஜீரியா, இந்தியா, பிரேசில் ஆகிய நான்கு நாடுகளில் பிரதிநிதி அலுவலகங்களையும் கட்டியமைத்து வருகின்றோம். ஒத்துழைப்புக் கூட்டாளிகளை அதிகரிக்கும் முயற்சியுடன், எங்களது உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்தி வகைகளையும் அதிகரிக்க பாடுபடுகின்றோம் என்று அவர் கூறினார்.

வெளிநாட்டுத் திறப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வசதி அளிக்கும் வகையில், தொடர்புடைய தரமான சேவையில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. லான்சோ ஒட்டுமொத்த வரி விலக்கு மண்டலத்தில் பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலக் கட்டுமானத்துக்கு சிறப்புச் சேவை வழங்கப்படுகிறது. சுங்கத் துறை பரிசோதனை, வரி விலக்கு ஒழுங்குமுறை, ஏற்றியிறக்கல் சேவை முதலிய சேவைகள் ஒரே அலுவலகக் கட்டிடத்தில் நிறைவேற்றப்படலாம். லான்சோ ஒட்டுமொத்த வரி விலக்கு மண்டலத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது,

அலுவலகக் கட்டிடத்தில் முதலாவது மாடியில் சுங்கத் துறை, தரக் கண்காணிப்பு, ஆய்வு மற்றும் தடுப்பு துறைப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். சுங்கத் துறை தொடர்பான ஒழுங்குமுறைகள் அனைத்தும் இங்கே நிறைவேற்றப்பட முடியும். கூட்டு நிறுவனங்களைப் பொறுத்த வரையும் சரி அரசு வாரியங்களைப் பொறுத்த வரையும் சரி, பணிப் பயன் உயர்வாக இருக்கும் என்றார் அவர்.

வெளிநாடுகளில் கூட்டு நிறுவனங்களின் அலுவல்களை விரிவாக்குவதற்கு சிறப்பான போக்குவரத்து வசதி தேவை. லான்-சின் வழி உயர்வேகத் தொடர்வண்டி போக்குவரத்துக்கு வந்த பிறகு, பழைய லான்-சின் இருப்புப் பாதை சரக்குப் போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படலாம். உயர்வேக இருப்புப் பாதை பயணிகளுக்குச் சேவை புரியலாம். இந்த வழி போக்குவரத்து ஆற்றல் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

அதேவேளையில், லான்-சின் உயர்வேகத் தொடர்வண்டி சேவை, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான லான்சோ நகரத்தின் திறப்பில் முக்கிய இடம் வகிக்கும் ஒட்டுமொத்த வரி விலக்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு போக்குவரத்து மேம்பாட்டை வழங்கியுள்ளது. இம்மண்டலத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது,

வரி விலக்கு மண்டலத்தில் மானியக் கொள்கைகள் மேற்கொள்ளப்படுகிறன. இக்கொள்கையின் பயன்களை மேலும் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வசதியான போக்குவரத்து சேவை இன்றியமையாதது. இருப்புப் பாதை மூலம் சரக்குகளை வேகமாகவும் வசதியாகவும் அனுப்பலாம். லான்-சின் வழி உயர்வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்கு வருவது, சரக்கு போக்குவரத்தில் அதிக பங்கு ஆற்றுகின்றது. எமது வரி விலக்கு மண்டலத்தின் மேம்பாடுகள் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040