• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உயர்வேக தொடர்வண்டியின் ஒட்டுநர் ஒருவரின் கதை
  2015-07-04 20:28:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் கான் சூ மாநிலத் தலைநகர் லான் சோவுக்கும் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத் தலைநகர் உருமுச்சிவுக்கும் இடையே முதலாவது அதிவிரைவு தொடர்வண்டி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் இயக்கப்பட்டது. அதன் பிறகு, இரு நகரங்களுக்கிடையான அதிவிரைவு இருப்புப் பாதை முழுமையாக போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது. சீனாவின் வடமேற்குப் பகுதிகளிலுள்ள கான் சூ, சின்காய், சின்ஜியாங் ஆகியவை, அதிவிரைவு இருப்புப் பாதை என்ற காலத்தில் நுழைவதை இது குறிக்கின்றது. இந்த அதிவிரைவு இருப்புப் பாதை, லான்சின் இருப்புப்பாதை என சுருக்கமாக கூறப்படுகிறது.

லாசின் இருப்புப் பாதை, 2009ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் நாள் கட்டியமைக்க தொடங்கப்பட்டது. இதன் மொத்த நீளம், 1,776 கி.மீ. மணிக்கு 250கி.மீ என்ற மிக உயர்வேகத்துடன், தொடர்வண்டி இந்த இருப்புப் பாதையில் பயணிக்கும். சீனாவின் பீடபூமியில், கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகளில், கட்டியமைக்கப்பட்ட முதலாவது அதிவிரைவு இருப்புப்பாதை இதுவாகும்.

பழைய இருப்புப் பாதை வழியே, லான் சோ மற்றும் உருமுச்சி நகரங்களுக்கிடையேயான தூரத்தைக் கடக்க பயணத்தில் 26 மணி நேரம் செலவானது. புதிய உயர்வேக இருப்புப் பாதையில், பயணிக்கும் பொழுது, 11 மணி நேரம் மட்டும் தேவை. சீனாவில் வடமேற்குப் பகுதியில் ஓடும் உயர்வேக தொடர்வண்டியும் தனிச்சிறப்புடைய இயற்கைச் சுற்றுச்சூழலும் ஒரு சிறந்த காட்சியை உருவாக்குகின்றன. அதேசமயம், தொடர் வண்டி வண்டியின் ஓட்டுநர் தொழில் என்பது, பொது மக்களின் மனதில் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் நல்ல தொழில் ஆகும். அடுத்து , உயர்வேக தொடர்வண்டியின் ஓட்டுநரான அதி.துர்தி அவர்களின் கதையை கூறுகின்றோம்.

அதி.துர்தியின் தந்தை, இருப்புப் பாதையில் பணிபுரிந்து வருகிறார். அவரது வீடு, இருப்புப் பாதையின் அருகில் உள்ளது. குழந்தையாக இருந்தபோதே, தொடர் வண்டியை ஓட்டும் பணி மீது அதி.துர்திக்கு ஆவலும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. பிறகு, இருப்புப் பாதை தொழில்முறைப் பள்ளியில் அவர் படித்தார். படிப்பை நிறைவேற்றிய பின் பயிற்சியில் ஈடுபட்ட அவர், 2003ஆம் ஆண்டு முதல், தொடர்வண்டியின் ஓட்டுநராக பணி பெற்று, தனது கனவை நனவாக்கினார்.

என்னுடைய பயிற்சிக் காலத்தின் 4ஆவது ஆண்டில், தொடர்வண்டியின் ஓட்டுநர் என்ற தகுநிலை பெற்றேன். அப்போது தேர்வில் பங்கேற்றவர்களில் சோதனையை கடந்த முதல் ஆள் நான் தான் என்று அதி.துர்தி பெருமையுடன் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு மிகவும் பிடித்தமான இந்த பணியில், அதி.துர்தி நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். இந்த நான்கு ஆண்டுகளில், சரக்கு மற்றும் பயணியர் தொடர்வண்டிகளை அவர் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு சின்ஜியாங்கில் உயர்வேக தொடர்வண்டிக்கான ஓட்டுநர்கள் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கை தகவலை அறிந்த அதி.துர்தி உடனடியாக முதலாவதாக தான் பெயரைப் பதிவுச் செய்தார்.

கண்டிப்பான முறையில் நடைபெற்ற உடல் நலச் சோதனை மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில், அதி.துர்தி சிறந்த சாதனையுடன் தேர்வு பெற்றார். விளைவாக, அதி.துர்தி உள்ளிட்ட மொத்தமாக, 22 இளைஞர்கள், உயர்வேக தொடர்வண்டியின் ஓட்டுநர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள், சின்ஜியாங்கின் முதலாவது தொகுதி ஓட்டுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், எமது பிரிவுக்கு நிறுவனத் தலைமையகத்தின் பாராட்டு கிடைத்தது. காரணம், தேர்வில் எமது குழுவினர் பெற்ற புள்ளிகள் அதிகமாகும் என்றும் அனைவரும் தேர்வைக் கடந்துள்ளனர் என்றும் அதி.துர்தி கூறினார்.

பெய்ஜிங்கில் நேருக்கு நேர்முகத் தேர்வு முடிவுக்கு வந்த பின், அதி.துர்தி, செங்து நகருக்கு சென்று ஒரு மாதம் சிறப்புப் பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது, வகுப்பில் ஒன்றுகூடிய சகமாணவர்கள், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு மாதக் காலத்தில் அதி.துர்தி, உயர்வேக தொடர்வண்டி தொடர்பான பல்வகை அறிவை அதிகமாகவும் ஆழமாகவும் கற்றுக் கொண்டார்.

படிக்க வேண்டிய புத்தகங்கள் அதிகம். அவற்றில் பல புதியவையாகவும் கடினமாகவும் இருந்தன. சில செய்திகள் புதியவில்லை. கேள்விகள் எழுந்தவுடன் தீர்வு காண முயன்றேன். எனது வகுப்பில் பல பிரிவுகள் உள்ளன. எனவே, உயர்வேகதொடர்வண்டி தொடர்பான கேள்விகளுக்கு, அந்தப் பிரிவின் சகமாணவர்களிடம் இருந்து உதவி பெற்றேன் என்று துர்தி தெரிவித்தார்.

செங்து நகரில் படிப்பை நிறைவேற்றிய பிறகு, அதி.துர்தி, பயிற்சியை தொடக்கினார். அவரது ஆசிரியரின் தலைமையில், அவர் வூகான் நகரில் உயர்வேக தொடர்வண்டியை முதல்முறையாக ஓட்டினார். பயிற்சியின்போது, உயர்வேக தொடர்வண்டியின் கண்டிப்பான ஒழுங்குமுறையை அவர் பின்பற்றியுள்ளார். ஒழுங்குமுறை, அமைப்புமுறை ஆகியவற்றின் காரணமாக, உயர்வேக தொடர்வண்டி உயர்வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதற்கு உரிய ஆதரவு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் காலை 11மணிக்கு, டி8602 இலக்கமுடைய உயர்வேக தொடர்வண்டி, உருமுச்சி நகரின் தெற்கு நிலையத்தில் இருந்து புறப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நேரம் இது. அதேசமயத்தில், இந்த உயர்வேக தொடர்வண்டியின் ஓட்டுநராக, அதி.துர்தி நன்றாக தனது பணியை நிறைவேற்றினார். அவர், சின்ஜியாங்கின் உயர்வேக தொடர்வண்டி ஓட்டுநர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ஜியாங்கில், அதி.துர்தி போன்ற எண்ணற்ற பணியாளர்கள் தினமும் முயற்சிகளை எடுப்பதால், உயர்வேக தொடர்வண்டிகள் பாதுகாப்பாகவும் தாமதமின்றியும் இயங்கி வருகின்றன.

உருமுச்சி பகுதிக்கு வந்து செல்லும் உயர்வேக தொடர்வண்டி இயங்கும் போக்கில், 100விழுக்காட்டு பாதுகாப்பு நிலை காணப்படுகிறது. போக்குவரத்துக்கு திறந்தது முதலாக இதுவரை, விபத்து ஏதும் இல்லை என்று அதி.துர்தி தெரிவித்தார்.

அவர் மேலும் செய்தியாளரிடம் பேசுகையில், நாள்தோறும் இயங்கும் தொடர்வண்டிகள் பழுதுபார்க்குமிடத்துக்கு திரும்புகின்றன. பல பணியாளர்களைப் பொறுத்த வரை, இது தான், ஒரு நாள் பணியின் தொடக்கம். மறைக்கப்படக் கூடிய எந்த பாதுகாப்பு ஆபத்தும் 2-வது நாளில் ஏற்படுவதைத் தடுக்க அவர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என்றார். அவர் கூறியாவது

இரவு 12மணி முதல் 2-வது நாள் அதிகாலை 4 மணி வரை, அனைத்து உயர்வேக தொடர்ண்டிகளிலும் சோதனை மற்றும் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட வேண்டும். எந்த பிரச்சினையாவது கண்டுபிடிக்கப்படால், அது முற்றிலும் தீர்க்கப்பட்ட பிறகே தொடர்வண்டி வெளியே செல்லும். அதிகாலை 4மணி போது, உயர்வேக தொடர்வண்டி, பயணிகள் இல்லாத நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். கண்டிப்பான சோதனைகளுக்குப் பிறகு, ஒரு நாளின் முதலாவது தொடர்வண்டி இயக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

அதி.துர்தி உயர்வேக தொடர்வண்டியை ஓட்டத் தொடங்கி, இதுவரை, 6 திங்கள் காலம் ஆகி விட்டது. இக்காலத்தில் நாள்தோறும் ஒரே கதை மீண்டும் மீண்டும் நடந்தேறியுள்ளன. அதேசமயத்தில், சுவையான மற்றும் உணர்ச்சியான கதைகளும் நிகழ்ந்துள்ளன. தினமும் வந்துசெல்லும் பயணிகளைக் கண்டிருக்கும் அதி.துர்தி கூறியதாவது

எமது தொடர்வண்டியில், பயணிகள் பாதுகாப்பாக இலக்கு இடத்தை அடைவதைக் காணும் பொழுது, மிகவும் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடைகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040