• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் துவங்கிய 78வது ஆண்டு நினைவுக்கான நடவடிக்கை
  2015-07-08 14:29:04  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனத் தேசிய இனங்களின் போராட்டம் துவங்கிய 78வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாபெரும் வெற்றியும் வரலாற்று பங்கும் என்ற தலைப்பிலான கண்காட்சி, ஜுலை 7-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் நினைவகத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தலைமையமைச்சர் லீகெச்சியாங் உள்ளிட்ட தலைவர்கள் இக்கண்காட்சியினைப் பார்வையிட்டனர். 1937ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 7-ஆம் நாள், ஜப்பானிய இராணுவப்படை வேண்டுமென்றே லு கோ ஜியெள எனும் சம்பவத்தை உருவாக்கி, சீனாவில் ஆக்கிரமிப்புப் போரை தொடங்கியது. அதே வேளையில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டமும் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

மாபெரும் வெற்றியும் வரலாற்று பங்கும் என்ற கண்காட்சியில், இப்போர் தொடர்பான பல அரிய சித்திரவதைக்கான கருவிகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சீனத் தேசிய இனங்கள், ஜப்பானிய ஆக்கிரப்புக்கு எதிராக வீரஞ்செறிந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தியதன் வரலாறு முழுமையாக வெளியிடப்பட்டது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கண்காட்சியைப் பார்வையிட்டபோது கூறுகையில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சீன மக்கள் ரத்தம் சிந்தி உயிர்ப் பலிகொடுத்து உருவாக்கிய மாபெரும் வரலாற்றை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பல்வேறு தேசிய இன மக்களும், உறுதியாக தங்களது நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றார். அத்துடன், அமைதியைப் பேணிமதித்து, அமைதி வளர்ச்சி பாதையில் உறுதியாக ஊன்றி நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:(ஒலி)

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் வெளியிட்ட எழுச்சி, சீனத் தேசிய இன எழுச்சியாக திகழ்கின்றது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை மேற்கொள்ளும்போது, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்கும் வகையில், நாம் இத்தகைய எழுச்சியை வெளிக்கொணர வேண்டும். நாம் வரலாற்றை மறந்து விட கூடாது என்றார்.

பெய்ஜிங் 18வது இடை நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜாங் ச்செ இக்கண்காட்சியைப் பார்வையிட்டார். கண்காட்சி மூலம், புத்தகத்தில் இக்கால வரலாறு தொடர்பான தகவல்கள் உயிர்த்துடிப்புடன் எடுத்துக்காட்டப்படுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:(ஒலி2)

இக்கண்காட்சி மூலம், நாங்கள் மேலும் இப்போரைப் பற்றி அறிந்துகொண்டுள்ளோம். புத்தகத்தில் இருக்கும் தகவல்களை தவிர, போரின் குரூரமான தன்மையையும், அமைதியைப் பேணிக்காக்கும் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்துகொண்டோம். அக்கால வரலாறு எல்லோருடைய மனதிலும் பசுமரத்து ஆணி போல் பதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040