• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கான உச்சிநாட்டில் ஷி ச்சின்பீங்கின் உரை
  2015-07-10 08:50:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜூலை 9ஆம் நாள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கான 7ஆவது உச்சிமாநாடு, ரஷியாவின் உஃபாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ரஷிய அரசுத் தலைவர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் ரோசெஃப், இந்தியத் தலைமையமைச்ச்ர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாளியுறவு என்பது இந்த உச்சிமாநாட்டின் தலைப்பாகும். தற்போது, புதிதாக வளர்கின்ற நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தின் அதிகரிப்பு தொடர்ந்து தணிவடைந்துள்ளது. அண்மையில், பிரிக்ஸ் நாடு மீதான சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் மாபெரும் வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. இதன் வளர்ச்சி போக்கு குறையப்போவதில்லை என்றார். அதே நாள், இந்த உச்சிநாட்டில் எட்டியுள்ள பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரக் கூட்டாளியுறவு நெடுநோக்கு திட்டம், அடுத்த சில ஆண்டுகளில், இந்த நாடுகளுக்கிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு உரிய வளர்ச்சி இலக்குகளை வழங்கியுள்ளது என்று ஷி ச்சின்பீங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

நலன்களைக் கூட்டாக அனுபவித்து, நெருக்கமான பொருளாதாரக் கூட்டாளியுறவை உருவாக்கி, மூலவளத்தைப் பயன்படுத்தி, தொழில் துறையின் கட்டுமைப்பில் மேம்பாடுகளை வெளிக்கொணர்த்து, வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்க இந்த ஐந்து நாடுகள் விரிவாக்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க மண்டலத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரக் கூட்டாளியுறவு நெடுநோக்குத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை வளர்க்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.
புதிய வளர்ச்சி வங்கியை கட்டியமைத்து, அவசர வெளிநாட்டு கையிருப்பு ஏற்பாட்டை உருவாக்குவது, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்கும் முக்கிய நடவடிக்கைகளாகும். உலக நிலைமைக்கு ஏற்ப, வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தை வகுத்து, ஒத்துழைப்பு துறைகளை விரிவாக்கி, மேலதிகமான நாடுகள் இதில் கலந்துகொண்டு ஒத்துழைப்பதை ஈர்க்க வேண்டும். சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதித்துவத்தை பிரிக்ஸ் நாடுகள் விரைவுப்படுத்த வேண்டும். இது குறித்து, ரஷிய அரசுத் தலைவர் புதின் கூறியதாவது

பிரிக்ஸ் நாடுகளின் அசவர கையிருப்பு ஏற்பாட்டு திட்டம் மற்றும் புதிய வளர்ச்சி வங்கியை நாங்கள் கட்டியமைத்துள்ளோம். இதன் மொத்த தொகை இருபதாயிரம் கோடி அமெரிக்க டாலராகும். அண்மையில் பெரிய ரக போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிக் கட்டுமானத்தில் இவ்வங்கி கலந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
மேலும், பயங்கரவாத எதிர்ப்பு, தகவல் பாதுகாப்பு மற்றும் இணையதள நிர்வாகம் உள்ளிட்டவை குறித்தும் தலைவர்கள் தொடர்ந்து விவாதித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040