ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் சேர்வதன் ஒழுங்கு முறை, நடப்பு உஃபா உச்சி மாநாட்டில் துவங்கியது. பாகிஸ்தானின் பங்களிப்பை சீனா வரவேற்கிறது. பாகிஸ்தானுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் நெருக்கமான ஒத்துழைப்பை நிலைநிறுத்த சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.