• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சந்தைமுறையில் செயல்படும் பிரிக்ஸ் வங்கி மற்றும் ஆசிய முதலீட்டு வங்கி
  2015-07-10 18:40:13  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியும், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும், சந்தைமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று, சீன வெளியுறவுத் துறையின் அதிகாரி ஒருவர் ஜுலை 10ஆம் நாள் ரஷியாவின் உஃபாவில் தெரிவித்தார்.

இந்த இரு வங்கிகளுக்கும், வேறு நிறுவனத்திற்கும் இடையே சுதந்திரமாக போட்டியிடும் உறவு உள்ளது. அரசின் வழிக்காட்டிக்கு மாறாக, சர்வதேச விதிகள் மற்றும் சந்தைமுறையைப் பின்பற்றி, இந்த வங்கிகள் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய வளர்ச்சி வங்கி என்பது, சீனா, ரஷியா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்படும் நிதி நிறுவனமாகும்.

ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கி, ஆசியாவிலுள்ள பலதரப்பு வளர்ச்சி நிறுவனமாகும். அடிப்படை வசதிக் கட்டுமானத்திற்கு இவ்வங்கி முக்கியமாக ஆதரவு அளிப்பதாக அமையும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040