சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் ரஷியாவின் உஃபா நகரில் ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் அஸ்ராவ் கானியை 10ஆம் நாள் சந்தித்துரையாடினார்.
ஆப்கானிஸ்தானில் சகிப்புத் தன்மை வாய்ந்த தேசிய இணக்கத்தை பரந்தளவில் நனவாக்குவதானது, உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பயனுள்ள வழிமுறையாகும் என்றும், ஆப்கானிஸ்தான் பிரச்சினையினைத் தீர்ப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பங்காற்றுவதற்கு சீனா ஆதரவளிக்கின்றது என்றும் ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை சீனா நீண்டகாலமாக ஆதரிக்கின்றது. அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், சீனாவுடன் இணைந்து பிரதேச அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க விரும்புவதாகவும் கானி இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.