• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர தொடங்கியது
  2015-07-11 11:36:51  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை அடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் செயற்குழுவின் 15ஆவது கூட்டம் 10ஆம் நாள் ரஷியாவின் உஃபா நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், கசகஸ்தான் அரசுத் தலைவர் நசர்பயேவ், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் அதான்பயேவ் முதலிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2025ஆம் ஆண்டு வரையான வளர்ச்சித் திட்டம் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவும் பாகிஸ்தானும் இவ்வமைப்பில் சேரும் ஒழுங்கு முறையும் தொடங்கியது. இவ்வமைப்பு உருவாக்கப்பட்ட 14 ஆண்டுகளில் உறுப்பு நாடுகளை அதிகரிப்பது, இதுவே முதல்முறையாகும்.

தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 6 உறுப்பு நாடுகளை மட்டுமே கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு துஷான்பேவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் உறுப்பு நாட்டு விரிவாக்கம் பற்றிய சட்ட ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உஃபாவில் நடைபெற்ற நடப்புக்கூட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பார்வையாளர் நாடுகள் எனும் நிலையில் இருந்து உறுப்பு நாடுகளாக மாறும் ஒழுங்குமுறை துவக்கப்பட்டது. இது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறியதாவது:

புதிய உறுப்பு நாடுகளின் சேர்ப்பு, இவ்வமைப்பின் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புக்கு புதிய உந்து ஆற்றலை அதிகரிக்கும் என்று சீனா நம்புவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்ந்த பிறகு, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்கள் தொகை, உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 விழுக்காடு வசிக்கும். இதனால், இவ்வமைப்பின் செல்வாக்கு ஆற்றல், தெற்காசியா மற்றும் பரந்த அளவிலான பிரதேசத்துக்கு விரிவடையலாம். பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷெரிப் பேசுகையில்,

புதிய உறுப்பு நாடுகளை ஏற்றுக்கொள்வது, இவ்வமைப்பின் திருப்பு முனையாக உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சேர்ப்பு, ஐரோப்பிய மற்றும் ஆசிய பிரதேச அரசியல் சீர்திருத்தத்தின் எல்லையாக மாறும் என்று குறிப்பிட்டார்.

தவிர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் அதற்கு முன்பாக நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் ஒரு மண்டலமும் ஒரு பாதையும் என்னும் வளர்ச்சித் திட்டம், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி ஆகியவை விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன என்று குறிப்பிடத்தக்கது.

பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம், ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றியத்துடனான இணைப்பை சீராக நடைமுறைப்படுத்தி, இப்பிரதேசத்தின் சமச்சீதான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமென, ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040