• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அம்பினால் பல்லைப் பிடுங்கிய சிறுமி
  2015-07-20 19:36:35  cri எழுத்தின் அளவு:  A A A   

குழந்தைகளுக்கு பல் முளைக்கவில்லை என்றால் நெல்லினால் ஈறைக் கீறிவிட்டு பல் முளைக்கச் செய்வோம். ஆனால், அதே குழந்தைகள் பெரிதாகும்போது பல் விழுந்து, புதிய பல் முளைக்கும். முதலில் முளைத்த பல்லை ஆங்கிலத்தில் மில்க் டூத் என்று அழைக்கப்படுவதுண்டு.

பொதுவாக அனைவருக்கும் இந்தப் பல், இயற்கையாகவே விழுந்து விடும். ஆனால், அதற்கு ஒருசில நாள்கள் ஆகும். இந்த ஒரு சில நாள் பொறுக்க முடியாத அமெரிக்க சிறுமி அலெக்சிஸ் டேவிட்சன், அம்பின் மூலம் பல்லை பிடுங்கி விட்டார்.

அது எப்படி அம்பின்மூலம் பல்லைப் பிடுங்க முடியும் என்று தோன்றுகிறதா

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில்தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது. ஆடிக்கொண்டிருக்கும் பல்லில் சிறிய நூலினால் கட்டி அதன் மறுமுனையை அம்பில் கட்டி விட்டார். பின்னர், அந்த அம்பை வில் மூலம் விடும்போது ஆடிக் கொண்டிருந்தபல் வலிக்காமல் வெளியே பறந்து வந்து விட்டது.

அது எப்படி பறந்து வரும் என்ற கேள்வி நமக்குள் எழும். அது எப்படி வந்த்து என்பதை அனைவரும் அறியும் வகையில் இந்த பல் பிடுங்கும் முழு அரங்கேற்றத்தையும் டேவிட்சனின் தந்தை புகைப்படக் கருவியில் பதிவு செய்துள்ளார். அது இணையத்திலும் வெளி வந்துள்ளது. அதைப் பார்க்கும்போது அந்தப் பல் டேவிட்சனின் வாயிலிருந்து எப்படி வெளியே பறந்து வந்தது என்பதை நாம் காண முடியும்.

பயமறியாதவர் என்ற தந்தையால் அழைக்கப்படும் டேவிட்சன், முதலில் சிறிது பதற்றத்தில் இருந்தார். சோதனை வெற்றிகரமாக முடிந்த பின், எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

டேவிட்சனின் தந்தை ஜேசன் மேலும் கூறுகையில், முதலில் செய்யப்படக் கூடிய எந்த செயலாக இருந்தாலும், அந்த வாய்ப்பை நீ எடுத்துக் கொள் என்று கூறினேன். பல்லை இப்படித்தான் பிடுங்க வேண்டும் என்று நாங்கள் டேவிட்சனைக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அவரை ஊக்கப்படுத்தினோம். இந்த செய்தியை அறிந்த பலரும், டேவிட்சன் தைரியமான சிறுமிதான். இந்த முயற்சியை நாம் ஏன் மேற்கொள்ளவில்லை என்று தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டனர் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040