• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பிரச்சினை குறித்த அமெரிக்காவின் செயல்பாட்டுக்கு சீனா எதிர்ப்பு
  2015-07-30 19:24:36  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க உயர் அதிகாரிகள் சிலர் அண்மையில் தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து பொறுப்பற்ற கருத்துக்களைத் தெரிவித்ததை சீனா கவனித்துள்ளது. சீனாவுக்கும் தென் சீனக் கடற்பரப்பின் சுற்றுப்புற நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை அமெரிக்கா சீர்குலைக்கும் செயலை சீனா உறுதியாக எதிர்க்கிறது. தென் சீனக் கடற்பரப்பில் இராணுவமயமாக்கத்தை அமெரிக்கா முன்னேற்றுவதில் சீனா பெரும் கவனம் செலுத்துகிறது என்று சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் 30ஆம் நாள் தெரிவித்தார்.

தென் சீனக் கடல் பிரச்சினைக்கான கொள்கை மற்றும் நிலைப்பாட்டை சீனா பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளது. நான்ஷா தீவுகளில் மேற்கொள்ளும் கட்டுமானத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்தும் விவரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உண்மையைப் பொருட்படுத்தாமல், சீனா இராணுவ ஆற்றலைக் கொண்டு அச்சுறுத்தலை மேற்கொள்வதாகக் கூறிவருகிறது. மேலும், சீனாவை வேவு பார்க்க அமெரிக்கா தென் சீனக் கடற்பரப்பிற்கு கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி வருகிறது. அண்மையில் இராணுவக் கூட்டணியை அது இப்பகுதியில் வலுப்படுத்தி, கூட்டு இராணுவப் பயிற்சிகளையும் மேற்கொண்டது. அமெரிக்கா, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி மற்றும் பிரதேச அமைதிக்குத் துணைபுரியும் வகையில் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040