சான் துங் மாநிலத்தின் ஹெச்சே நகரத்தைச் சேர்ந்த சுன்சுவாங் என்ற கிராமத்தின் பொறுப்பாளர், இது குறித்து செய்தியாளரிடம் கூறுகையில், 2013ஆம் ஆண்டுக்கு முன் கிராமவாசிகள் வெளியூருக்குச் சென்று வேலை செய்வது தானியங்களைப் பயிரிடுவது ஆகியவற்றின் மூலம் வருமானம் பெற்றனர். 2014ஆம் ஆண்டு தொடங்கி, மின்னணு வணிகம் கிராமத்தில் வளர்ந்து வருகிறது. இவ்வாண்டில் கிராமம் முழுவதிலும் உள்ள 460 குடும்பங்களில் 310 குடும்பங்கள் இணைய கடைகளைத் திறந்துள்ளன. இதன் மூலம் மொத்தமாக 1100 கிராமவாசிகள் இணைய வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
சிறிய அளவு, புதிதாக நிறுவும் இணையக் கடை, குறைவான முதலீடு முதலிவை, கிராமப்புற இணையக் கடைகளின் தனிச்சிறப்பியல்களாகும். வருமானம் மற்றும் இடர்பாட்டு எதிர்ப்புத் திறன் குறைவாகவும், நேரம் அதிகமாகவும் பெற்றுள்ள விவசாயிகளுக்கு இணையத்தில் கடைத் திறந்து தொழில் புரியும் முறைமை, சீராக பொருந்தியது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அலிபாபாவின் உயர்நிலை ஆய்வாளர் சென்லியாங் பேசுகையில், 2014ஆம் ஆண்டில் கிராம மின்னணு வணிகத்தின் மிக சிறப்பான மாதிரியாகத் திகழும் தெளபாவ் கிராமங்கள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறன. ஆண்டுக்கு வர்த்தகத் தொகை ஒரு கோடி யுவானைத் தாண்டிய தெள பாவ் கிராமங்களின் எண்ணிக்கை 200க்குக் கூடுதலாகும் என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில் சீன அரசு, கிராமத்தில் மின்னணு வணிக வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதில் விடா முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அண்மையில், நடுப்பகுதி மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 26 மாநிலங்களைச் சேர்ந்த 200 மாவட்டங்களுக்கு, நடுவண் நிதித்துறை மொத்தமாக 370 கோடி யுவான் ஆதரவுத்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. கிராம மின்னணு வணிகம், கிராம இளைஞர்கள் தொழில் புரியும் புதிய மேடையாகவும் கிராமவாசிகளின் வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிமுறையாகவும் மாறியுள்ளது. இதனால் கிராமத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கையில் பயனுள்ள மேம்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால், அதேவேளை கிராம மின்னணு வணிகத்தில், பின்தங்கிய நிலையிலான உற்பத்திப்பொருட்களின் தொழில் நுட்ப நிலை, பின்தங்கியது, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு பற்றாக்குறைவு, தொடர்புடைய திறமைசாலிகளின் குறைவு உள்ளிட்ட சில பிரச்சினைகள் உள்ளன. இதுக் குறித்து, யாங்சி வணிக கழகத்தின் சந்தை விற்பனையியலுக்கான துணை பேராசிரியர் லீ யாங் பேசுகையில், தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்தி, மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடலாம். ஆனால், திறமைசாலி மற்றும் நிதிப் பற்றாக்குறை முதலான பிரச்சினைகளைக் குறுகிய காலத்துக்குள் தீர்க்க முடியாது என்று தெரிவித்தார்.