• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நினைவு நடவடிக்கைகளின் முக்கியத்துவம்
  2015-08-19 19:28:29  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு, ஐ.நா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகவும், உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது. மேலும் ஜப்பானின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவை சீன மக்கள் கொண்டாடுகின்றனர். உலக அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக்காத்து, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, ஐ.நா சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் உறுதியாகக் கடைபிடிப்பதை மீண்டும் வலியுறுத்துவது பற்றி ஐ.நா பாதுகாப்பவை பிப்ரவரி 23ஆம் நாள் வெளிப்படையாக விவாதம் நடத்தியுள்ளது. 2வது உலகப் போர் நிறைவடைந்த 70ஆவது ஆண்டையும், ஐ.நா நிறுவபட்டதற்கான வரலாற்று காரணம் தொடர்பான தீர்மானத்தையும் நினைவு கூரும் வகையில், சிறப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றிய தீர்மானத்தை 69ஆவது ஐ.நா பேரவை மார்ச் 26ஆம் நாள் நிறைவேற்றியது.

நேயர்களின் கோரிக்கைக்கிணங்க இன்றைய நிகழ்ச்சியில், இந்நினைவு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உங்களிடம் எடுத்து கூறுகின்றேன்.

தற்போது, உலகம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய தருணத்தில் உள்ளது. சர்வதேச நிலைமையும் உலக கட்டமைப்பும் ஆழந்த்தாகவும் சிக்கலாகவும் மாறி வருகின்றன. இந்நிலையில் ஐ.நா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவையும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவையும் சிறப்பாக நினைவு கூருவது தனிச்சிறப்புமிக்க வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

போர் மக்களுக்குக் கொண்டு வந்த சோகமான பாடத்தை கருத்தில் கொண்டு, இத்தகைய பெரும்துன்ப நிகழ்ச்சி மீண்டும் நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

70 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்த 2ஆவது உலகப் போர் 200 கோடி மக்களுக்குத் துன்பதுயரங்களைக் கொண்டு வந்தது. ராணுவ வெறியில் ஈடுபட்ட ஜப்பானியர்கள் சீனாவின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்தனர். இக்காலத்தில் 3 கோடியே 50 இலட்சம் சீனப் படைவீர்ர்களும் மக்களும் காயமடைந்தனர் அல்லது உயிரிழந்தனர். ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் கூட, சிலர் ஜப்பானி போர் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் ராணுவ வெறியை ஆதரிக்கின்றனர். இது குறித்து, அமைதியை நேசிக்கும் மக்களும் நாடுகளும் உயர் விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்புடைய நினைவு நடவடிக்கைகள் மூலம், பன்னாடுகளும் சேர்ந்து முயற்சி மேற்கொண்டு மனிதகுலத்தின் நியாயத்தையும் மனசாட்சியையும் கூட்டாகப் பாதுகாக்க வேண்டும். நீண்டகால அமைதி என்ற நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

ஐ.நா சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் கடைபிடிப்பதாக அளித்த வாக்குறுதியைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஐ.நா சாசனத்தின்படி பன்னாடுகளுக்கிடையேயான உறவைக் கையாள வேண்டும்.

உலகப் பாசிச எதிர்ப்புப் போர் சிக்கலான நிலையை அடைந்த போது ஐ.நாவும் ஐ.நாவின் சாசனங்களும் உருவாக்கப்பட்டன. இரண்டு உலகப் போர்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அவை உருவாக்கப்பட்டன. கடந்த 70 ஆண்டுகாலத்தில், உலக அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது, பன்னாட்டு ஒத்துழைப்பை முன்னேற்றுவிப்பது முதலியவற்றில் ஐ.நா அதிக பங்காற்றியுள்ளது. தற்போது, ஐ.நாவின் சாசனம் மேலும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த்த்தாக உள்ளது. பல தரப்பு வாதத்தில் உலக நாடுகள் கடைபிடித்து, ஐ.நா மற்றும் பாதுகாப்பவையின் அதிகாரத்துக்கு மதிப்பளித்து, பன்னாட்டு உறவிலுள்ள நியாயமற்ற சமநிலையற்ற நிலைமையை அகற்றும் வகையில் பன்னாட்டு உறவுக் கோட்பாட்டை மீறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் புதிய ரக பன்னாட்டுறவை உருவாக்கி, உலக ஒழுங்கை மேலும் நியாயமான திசை நோக்கி வளர்ச்சியுறச் செய்து முன்னேற்ற வேண்டும்.

தற்போது, பன்னாட்டு அமைப்புமுறையும் ஒழுங்கும் ஆழமாக சீர்செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய சர்வதேச ஒழுங்குமுறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று பல வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. தற்கால கண்ணோட்டம் மற்றும் நடைமுறை கோரிக்கையின்படி, சர்வதேசச் சமூகம் ஒத்துழைத்து, மேலும் நியாயமானதொரு புதிய சர்வதேச ஒழுங்கை கூட்டாக நிறுவ வேண்டும். இத்தகைய நடவடிக்கை மூலம் ஐ.நா சாசனத்துக்கு புதிய உயிராற்றலை வழங்க வேண்டும்.

ஐ.நா நிறுவப்பட்ட மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது பற்றி சீனா நல்ல யோசனைகளை முன்வைத்துள்ளது.

70 ஆண்டுகளுக்கு முன், 2ஆவது உலகப் போரில் பாசிச எதிர்ப்புக் கூட்டணியில் சீனா முக்கியதொரு ஆற்றலாக பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றிக்கு மாபெரும் பங்காற்றியுள்ளது. இன்று, பொறுப்பேற்கும் மனதுடன் உலக அமைதி மற்றும் பாதுகாப்பைச் சீனா கருத்தில் கொண்டு, பாதுகாப்பவையில் பொது விவாதம் நடத்தி, சுமார் 40 நாடுகளுடன் சேர்ந்து 70ஆவது ஆண்டு நிறைவு தொடர்பான நினைவு நடவடிக்கை மேற்கொள்வது பற்றிய கருத்துருவை முன்வைத்தது. சீனத் தனிச்சிறப்புமிக்க பல தரப்புத் தூதாண்மை கொள்கை ஐ.நா என்ற உலகில் மிக முக்கியமான நிறுவனத்தில் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது.

வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு, அமைதியைப் பேணிமதித்து, எதிர்காலத்தை திறந்து வைக்கும் கருத்தின் அடிப்படையில் சீனா இவ்வாண்டு செப்டெம்பர் திங்களில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாக கொண்டாடும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040