• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி பற்றி அறிமுகம்
  2015-08-19 19:26:16  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு, ஐ.நா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகவும், உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவாகவும் விளங்குகின்றது. தவிர, சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவும் இவ்வாண்டாகும்.

நேயர்களின் கோரிக்கையின் படி, இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர், உலகில் 2ஆவது சீன-ஜப்பானிய போராகவும் அழைக்கப்படுகிறது. 2ஆவது உலகப் போரின் போது, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்கள் மேற்கொண்ட தேசிய இனப் போர் இதுவாகும். 1937ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் நாள் பெய்ஜிங் நகரின் லுகுவ்சியாவ் எனும் இடத்தில் ஜப்பானின் படைப்பிரிவு முதலாக துப்பாக்கி சூடு நடத்தியது. அப்போதைய கோமின்டாங் அரசு அனைத்து சீனப் படைவீரர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது முதல், 1945ஆம் ஆண்டு போரில் தோல்வியுற்றதாக ஜப்பான் அறிவித்தது வரை, மொத்தமாக இப்போர் 8 ஆண்டுகளாக நடந்தது.

சீனா மற்றும் ஜப்பானின் வரலாற்றைப் பார்த்தால், இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆயிரமாண்டு நட்புறவு நிலவியது. எடுத்துக்காட்டாக 7ஆவது நூற்றாண்டில், தூதர்கள், மாணவர்கள், துறவிகள் முதலியவர் அடங்கிய 18 பயணக்குழுக்களை ஜப்பான் சீனாவுக்கு அனுப்பியது. அப்போதைய சீன தாங் வம்சத்தின் முன்னேறிய அரசியல் அமைப்புமுறை, உற்பத்தி வழிமுறை மற்றும் சீனப் பண்பாட்டை அவர்கள் கற்றுக்கொண்டு ஜப்பானுக்குத் திரும்பினர். ஆகவே, இரு நாட்டுறவின் வரலாற்றில் 200 ஆண்டுகளுக்கு மேலான பொற்காலம் உள்ளது. 1368ஆம் ஆண்டு, சீனாவில் மிங் வம்சம் நிறுவப்பட்டது. மிங் ஆட்சியின் போது அண்டை நாட்டுறவு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டது. உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க சீனாவுடனான வரத்தகத்தை வலுப்படுத்த ஜப்பான் தீர்மானித்தது. எனவே, அப்போதைய ஜப்பானிய அரசு சிறப்புத் தூதரை சீனாவுக்கு அனுப்பி மிங் வம்ச பேரரசரிடம் சீனாவுக்கு இணை நாடாக ஜப்பான் மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தது.

1868ஆம் ஆண்டு ஜப்பானில் (The Meiji restoration) மெய்ஜி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பானின் உரிமைப் பிரதேசம் சிறிது. உற்பத்தி பொருட்களும் குறைவு. அவை எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலை நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று ஜப்பானில் பலர் கருதினர். எனவே, நாட்டின் ஆற்றல் வலுவடைந்து வருவதுடன் வெளிநாட்டின் மீது ஜப்பான் ஊடுருவல் செய்யத் துவங்கியது.

20ஆவது நூற்றாண்டின் 30,40 ஆண்டுகளில், சீனாவின் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போர் ஜப்பானின் ஊடுருவல் நடவடிக்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

சீனாவில் ஜப்பான் பல இலட்சம் படை வீர்ர்களை அனுப்பியது. 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஜப்பான் ஷாங்காய் மாநகரின் தென் தொடர்வண்டி நிலையத்தின் மீது வான் தாக்குதல் தொடுத்தது. அதே ஆண்டு ஜப்பானின் படை நான்ஜிங் நகரில் சுமார் 3 இலட்சம் அப்பாவி மக்களை படுகொலை செய்து நான்ஜிங் நகரைக் கைப்பற்றியது.

அப்போதைய கோமின்தாங் கட்சி அரசு பயனுள்ள முறையில் ஜப்பானின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான படைப் பிரிவு இந்த எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றியுள்ளது.

1941ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 7ஆம் நாள் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் மறைமுகமாகத் தொக்குதல் தொடுத்த்து. அதனுடன் ஜப்பானின் போர் இலக்கு சீனாவிலிருந்து அமெரிக்காவாக மாற்றியது. அடுத்த நாள், ஜப்பான் மீது போர் நடத்தப் போவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலக நாடுகளும் ஜப்பானின் மீது வர்த்தக தடையை விதிக்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

டிசம்பர் 9ஆம் நாள் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிராக போர் நடத்த சீனாவின் கோமின்தாங் அரசு அறிவித்த்து. விரைவில், ஜப்பானுடன் நடுநிலையில் உள்ள சோவியட் யூனினைத் தவிர, பிரிட்டன் உள்பட கூட்டணி நாடுகளும் ஜப்பானுக்கு எதிராக போர் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் அது முதல் 2ஆவது உலக ப் போரின் ஒரு பகுதியாக மாறியது. பிறகு, யுனான்-மியன்மர் நெடுஞ்சாலை, ஒட்டக முதுகு விமான நெறி, மியன்மார், இந்தியா ஆகியவை வழியாக அமெரிக்கா சீனாவுக்கு அதிக இராணுவ வசதிகளை அனுப்பி சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

1943ஆம் ஆண்டு நவம்பர் காய்ரோ அறிக்கை உருவாக்கப்பட்டது. போரிடும் ஆற்றல் பற்றாக்குறையை உணர்ந்த ஜப்பான், சீனாவில் தனது போர் ஆற்றலைக் குறைந்துள்ளது.

1945ஆம் ஆண்டு ஜுலை 26ஆம் நாள், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகியவை போஸ்தான் சுற்ற்றிக்கையை வெளியிட்டு, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று ஜப்பானை வற்புறுத்தின.

1945ஆம் ஆகஸ்ட் ஜப்பானில் அமெரிக்க அடுத்தடுத்து இரு அணு குண்டுகளை வீசியது. அதேவேளையில், சீன மக்கள் நாட்டின் உரிமைப் பிரதேசத்தை மீண்டும் கைபற்றி வந்த வண்ணம் இருந்தனர். ஆகஸ்ட் 15ஆம் நாள் தோல்வியை ஏற்றுக்கொண்டு நிபந்தனை இன்றி சரணடைவதாக ஜப்பான் பேரரசர் அறிவித்தார். செப்டெம்பர் 2ஆம் நாள் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் மிசூலி எனும் அமெரிக்காவின் ராணுவக் கப்பலில் சரணமடைந்த்து தொடர்பான அறிக்கையில் கையொப்பமிட்டார்.

நேயர்கள் இதுவரை, ஜப்பானின் ஆக்கிரமிப்புப் போர் எதிரான சீன மக்களின் போர் பற்றி எடுத்து கூறினேன். அடுத்த நிகழ்ச்சியில் இந்தப் போரில் சீன மக்களின் வெற்றியில் பங்காற்றி சீன மக்களின் உயர் மதிப்பைப் பெற்றுள்ள இந்திய மருத்துவர் துவாரகாந்த் ஷந்த்ராம் கோட்நிஸ் பற்றி அறிமுகப்படுத்துவேன் கேட்க தவறாதீர்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040