• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியாவில் மிகப் பெரிய நிலத்தடித் தொடர்வண்டி நிலையம்
  2015-08-20 10:52:08  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஷென்ச்சென் நகரிலுள்ள ஃபூ தியன் தொடர்வண்டி நிலையத்தின் முக்கிய பகுதி மற்றும் துணை கட்டமைப்பு திட்டப்பணிகள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையத்தின் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதை இது காட்டுகிறது. குவாங் சோ இருப்புப் பாதை நிறுவனத்திலிருந்து 19ஆம் நாள் கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வந்துள்ளது.

1021 மீட்டர் நீளமும், 78 மீட்டர் அகலமும் 3 மாடிகளும் உடைய இந்த நிலையத்தில் 8 பாதைகள், 4 மேடைகள், 21 நுழைவாயில்கள் ஆகியவை உள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 88 சதுர மீட்டர் பரப்பளவுடைய இந்த நிலையம் ஆசியாவில் மிகப் பெரிய நிலத்தடித் தொடர்வண்டி நிலையமாக திகழ்கிறது. அமெரிக்காவின் நியுயார்க்கிலுள்ள மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு அடுத்து இது உலகளவில் 2ஆவது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் இறுதிக்குள் இந்த நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040