• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செப்டம்பர் 3ஆம் நாள் நடைபெறும் ராணு அணி வகுப்பு விழாவுக்கான தயார் மற்றும் பயிற்சி
  2015-08-24 11:27:58  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக பாசிச போர் எதிர்ப்புப் போர் வெற்றிபெற்றதன் 70-வது ஆண்டு நிறைவை நினைவுக் கூரும் வகையில், பெய்ஜிங்கில், இவ்வாண்டு செப்டம்பர் திங்கள் மூன்றாம் நாள், ராணுவ அணி வகுப்பு விழா நடத்தப்படும். தற்போது, இந்த விழாவுக்கான தயார் மற்றும் பயிற்சிப் பணிகள் சீனா மற்றும் வெளிநாடுகளில் அதிக கவனம் ஈர்த்துள்ளன. தற்போது, ராணுவ அணி வகுப்பு விழாவுக்கான பல்வகை பணிகள் முக்கிய கட்டத்தில் இருக்கின்றன.

ராணுவ அணி வகுப்பு விழாக்கான கூட்டுத் தலைமையகத்தின் துணைத் தலைவரும், பெய்ஜிங் ராணுவ வட்டாரத்தின் துணைத் தலைவருமான யாங் சுன் இந்த விழா பற்றி விளக்கம் அளித்துப் பேசுகையில்

நடப்பு ராணு அணி வகுப்பு விழாவில் மொத்தம் 50 குழுக்கள் இடம்பெறுகின்றன. இதில், போரில் ஈடுபட்ட மூத்த வீரர்களை கொண்ட 2 குழுக்கள், 11 பல்வகை படைப் பிரிவுகள் குழுக்கள், 27 ராணுவ சாசனங்கள் குழுக்கள் மற்றும் 10 வான் படைப் பிரிவுக் குழுக்கள் ஆகியன அடங்குகின்றன. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்பார்கள். இவர்கள், சீனாவின் 7 பெரிய ராணுவ வட்டாரங்கள், கடற்படை, வான் படை, ஏவுகணைப் பிரிவு, ஆயுத காவல்துறை மற்றும் நான்கு தலைமையகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். விழாவில் காட்சிக்கு வைக்கப்படும் ராணுவ சாதனங்கள் அனைத்தும் சீனா சொந்தமாக தயாரித்தவை. பெரும்பாலான பகுதிகள், படைப்பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய ரக சாதனங்கள். பல சாதனங்கள் முதல்முறையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். இதைத் தவிரவும், 10க்கும் அதிகமான நாடுகள், விழாவில் பங்கேற்கும் வகையில் தனது குழுக்களை அல்லது பிரதிநிதிக் குழுக்களை அனுப்பியுள்ளன என்று குறிப்பிட்டார்.

நடப்பு ராணுவ அணி வகுப்பு விழாவில் புதிய பதிவுகள் உருவாகி விட்டன என்றும் யாங் சுன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

போரில் ஈடுபட்ட மூத்த வீரர்களைக் கொண்டு முதன்முறையாக நினைவு நிகழ்வின் வரலாற்றுத் தன்மையை வெளிக்காட்டுகின்றோம். மேலும், முதல்முறையாக, வெளிநாட்டு ராணுவ வீரர்களை அழைத்து, உலக பாசிச போருக்கு எதிரான பன்னாட்டு பயிற்சி மற்றும் பங்கேற்பை வெளிக்காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 3ஆம் நாள் நினைவு நிகழ்ச்சி சுமுகமாக நடைபெறுவதை உறுதிச்செய்யும் வகையில், கடந்த சனி இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை, பெய்ஜிங்கின் தியன்ஆன்மென் பகுதியிலும் சாங் ஆன் நெடுஞ்சாலையிலும் சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில், 500க்கும் அதிகமான ராணுவ சாதனங்கள் மற்றும் சுமார் 200 ராணுவ விமானங்களுடன் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் கலந்து கொண்டனர். மேலும், ரஷியா, கசகஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட 10க்கும் மேலான நாடுகளின் குழுக்களும் பிரதிநிதிக் குழுக்களும் அழைப்பை ஏற்று இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. 35ஆயிரம் ரசிகர்கள் அன்று நடைபெற்ற இந்த பயிற்சியை நேரில்கண்டு ரசித்தனர்.

நடப்பு பயிற்சி எதிர்பார்க்கப்பட்ட பயனை அடைந்துள்ளது. இதன் மூலம், அடுத்த திங்களில் நடைபெறவுள்ள நினைவு மாநாட்டிற்கு உரிய சிறந்த பணி அனுபவம் கிடைத்துள்ளது என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040