• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய ஆற்றல் வாகன நகர்வுத் துறையில் உலகின் மிகப் பெரிய சந்தையான சீனா
  2015-08-29 18:30:40  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய ஆற்றல் வாகனங்களின் சந்தை அளவில், அமெரிக்காவைத் தாண்டும், சீனா, உலகின் மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டில், சீனாவில் புதிய ஆற்றல் வாகனங்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை, 2 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என்று 29ஆம் நாள் சீனாவின் சுய் சோ நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

உலகில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், 2015ஆம் ஆண்டின் முற்பாதியில் , அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகியவற்றில் புதிய ஆற்றல் வாகனங்களின் விற்பனை மந்தமாகின. அதேசமயத்தில், சீனாவில் இத்தகைய வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்னை தொடர்ந்து அதிகரித்து வந்தது தெரிகிறது.

வாகனங்கள் பயணிக்கும் தூதரம் குறைவு, மின் ஊட்டத்தின் நேரம் அதிகம், பராமரிக்கும் இடங்களின் எண்ணிக்கை குறைவு ஆகிய பிரச்சினைகள், சீனாவின் புதிய ஆற்றல் வாகனங்களின் தற்போதைய வளர்ச்சிப் போக்கில் காணப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040