• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பணி கூட்டத்தில் ஷீ ச்சின்பிங் உரைக்கு பாராட்டுகள்
  2015-08-31 09:33:04  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷீ ச்சின்பிங் மத்திய கமிட்டியின் திபெத் பணி பற்றிய 6வது கூட்டத்தில் நிகழ்த்திய முக்கிய உரை, திபெத்திலும், சிங்காய், சிச்சுவான், யுன்னான், கஞ்சு ஆகிய நான்கு மாநிலங்களிலும் திபெத் இன மக்கள் வாழும் பிரதேசத்திலும் ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

மேற்கூறிய பிரதேசத்தில், ஹான் இன ஊழியர்கள் திபெத் இன மொழியை ஆக்கப்பூர்வமாக கற்றுக்கொள்வது, ஹான் இனத்துக்கும், திபெத் இனத்துக்குமிடையே புரிந்துணர்வை அதிகரிப்பதற்கும், இப்பிரதேச்ததின் இணக்கம் மற்றும் செழுமையை நிலைநிறுத்துவதற்கும் துணை புரியும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அலுவலகத்தின் துணை தலைவர் ச்சு சா கருத்து தெரிவித்தார்.

திபெத் பணி பற்றிய 6வது கூட்டத்தில், திபெத் இன மக்கள் வாழும் பிரதேசத்தை சட்டத்தின்படி ஆள்வது, முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வரலாற்று காலக் கட்டத்தில் தேசிய இன ஒற்றுமைப் பணியை செவ்வனே மேற்கொண்டால், இப்பிரதேசத்தின் பொது மக்களிடையே சட்ட கருத்தை நிலைநாட்டுவது முக்கியமானது என்பதை இது காட்டுகின்றது என்று சிங்காய் மாநிலத்தின் ஹாய் பெய் சோயைச் சேர்ந்த கட்சிக் கமிட்டி செயலாளர் நிமா சோமா கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040