• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் "9.3"நினைவு நடவடிக்கையில் அனைத்துலக ஊடகங்களின் கவனங்கள்
  2015-09-03 09:40:51  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றிபெற்றுள்ள 70ஆம் ஆண்டு நிறைவுக்கான நினைவு நடவடிக்கை 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கடந்த சில நாட்களில் உலக செய்தி ஊடகங்கள் சீனாவின் இந்த நினைவு நடவடிக்கை மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்நடவடிக்கை, சீனாவின் ஆற்றல்களை எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல, போர் வரலாற்றை மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து, அமைதியைப் பேணிகாக்கும் மனவுறுதியையும் தெரிவிப்பதாக, இந்த செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சீனாவின் அழைப்பை ஏற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்த நினைவு நடவடிக்கையில் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாபெரும் கொண்டாட்ட நடவடிக்கை மூலம், சீனாவின் வலிமையான ஆற்றலையும் அமைதிக்கான விருப்பத்தையும் எடுத்துக்காட்டும் என்று ரஷிய NG என்னும் செய்தியேடு கூறியது.

சீனா, அமைதியைப் பேணிகாக்க முயற்சிப்பதாக இந்த இராணுவ அணி வகுப்பு எடுத்துக்காட்டது என்று AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் DNA என்னும் செய்தியேட்டின் இணையத்தில் குறிப்பிடுகையில், சீனா, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முக்கிய கூட்டாளி நாடாகும். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர், கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டியது..

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040